`என்ன நடக்குமென்றே தெரியவில்லை!' - நடிகை அனன்யா வேதனை #Keralafloods

'கேரளா வெள்ளத்தால் என்ன நடக்குமென்றே தெரியவில்லை' என நடிகை அனன்யா ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் வேதனை தெரிவித்துள்ளார்.

அனன்யா

கேரளாவில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வெள்ளத்தால், அம்மாநிலமே முடங்கிப்போகும் சூழல் ஏற்பட்டுள்ளது. அப்பகுதி மக்கள் உண்ண, உடுத்த உடையின்றி தத்தளித்துவருகின்றனர். தொடர்ந்து பெய்துவரும் கன மழை காரணமாக, 350-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாகவும், மேலும் பலர் மாயமாகிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. பேரிடர் மீட்புப் படையினர், மீட்புப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டுவருகின்றனர். மீட்கப்பட்டவர்கள், முகாம்களில் பாதுகாப்பாகத் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தமிழில் 'நடோடிகள்', 'எங்கேயும் எப்போதும்', 'சீடன்', 'புலிவால்' உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை அனன்யா, கேரளா மாநிலம் கொச்சியில் வசித்துவருகிறார். கேரள வெள்ளம் தொடர்பாக ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ள வீடியோவில், ``என் வீடு முழுவதும் தண்ணீருக்குள் மூழ்கியுள்ளது. நாங்கள் தற்போது, பெரும்பாவூரில் உள்ள நடிகை ஆஷா ஷரத்தின் வீட்டில் உள்ளோம். எங்கள் உறவினர்களின் வீடுகளிலும் தண்ணீர் சூழ்ந்துள்ளது. நேற்று காலைதான் பாதுகாப்பாக உணர்ந்தோம். என்ன நடக்குமெனத் தெரியவில்லை. எல்லாம் கடவுளின் கையில் உள்ளது. ஆபத்தில் சிக்கியுள்ள மக்களை எனக்குத் தெரியும். நான் அவர்களைக் காப்பாற்ற வேண்டும். எங்களைக் காப்பாற்றியவர்களுக்கு நன்றி'' இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 

 

 

 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!