வெள்ளத்தில் தத்தளிக்கும் கேரளாவுக்கு ரஜினிகாந்த் நிதியுதவி!

கன மழையால் தத்தளிக்கும் கேரளாவுக்கு, நடிகர் ரஜினிகாந்த் ரூ. 15 லட்சம் நிவாரண நிதி வழங்கியுள்ளார்.

ரஜினிகாந்த்
 

கேரளாவில் வரலாறு காணாத கனமழை பெய்துவருகிறது. 'கடந்த 100 ஆண்டுகளில் இப்படியொரு பேரழிவை கேரளா சந்தித்ததில்லை. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 300-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 20,000 கோடி ரூபாய் மதிப்பிலான பொருள்கள் சேதம் அடைந்துள்ளன’ என்று கேரள முதல்வர் பினராயி வேதனை தெரிவித்துள்ளார். 

கன மழையால் நிலைகுலைந்துள்ள கேரளாவுக்கு, பல்வேறு மாநில அரசுகள் உதவ முன்வந்துள்ளன. தமிழக அரசு சார்பில் ரூ.10 கோடி வழங்கப்பட்டுள்ளது. தமிழக மக்களும் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்துவருகின்றனர். தமிழ்த் திரையுலகினர் பலரும் கேரளாவுக்கு நிவாரணத் தொகை வழங்கிவருகின்றனர். நடிகர் விஜய் சேதுபதி ரூ. 25 லட்சமும், தனுஷ் ரூ. 15 லட்சமும், சூர்யா, கார்த்தி ரூ.25 லட்சமும், சிவகார்த்திகேயன் ரூ.10 லட்சமும் கொடுத்துள்ளனர். தெலுங்கு நடிகர் பிரபாஸ் ரூ.1 கோடி கொடுத்திருக்கிறார். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இன்று கேரளா நிவாரண நிதிக்கு ரூ.15 லட்சம் வழங்கியுள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!