கருணாநிதி பிறந்த இல்லத்தில் மு.க.ஸ்டாலின் அஞ்சலி!

கருணாநிதி பிறந்த திருக்குவளை இல்லத்தில் மு.க.ஸ்டாலின், அவரது திருஉருவப் படத்துக்கு  மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

மு.க.ஸ்டாலின் அஞ்சலி

நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் கருணாநிதியின் பிறந்த இல்லம் உள்ளது. இன்று திருக்குவளைக்கு வந்த தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின், கருணாநிதியின் படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். மறைந்த தி.மு.க தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி ஆகஸ்ட் 7ம் தேதி உடல் நலக்குறைவால் சென்னை காவேரி மருத்துவமனையில் உயிரிழந்தார். கருணாநிதியின் உடல் அண்ணா சமாதிக்கு அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டது. கருணாநிதிக்குத் தமிழகம் முழுவதும் கண்ணீர் அஞ்சலி மெளன ஊர்வலம் போன்று அஞ்சலி செலுத்திவந்தனர்.  

அஞ்சலி

நேற்று திருச்சிக்கு நிகழ்ச்சி ஒன்றுக்கு வருகை தந்த ஸ்டாலின் இன்று கருணாநிதியின் சொந்த ஊரான திருக்குவளைக்குச் சென்று அங்கு உள்ள கருணாநிதியின் உருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்தினார். இதைத் தொடர்ந்து கருணாநிதியின் சட்டமன்றத் தொகுதியான திருவாரூர் வந்த ஸ்டாலின், சன்னதி தெருவிலுள்ள கருணாநிதியின் சகோதரி இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவ படத்துக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். இவருடன் வருகை தந்த கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் கருணாநிதியின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!