`வரலாறு தெரியாமல் பேசுகிறார் ரஜினி' - கொந்தளித்த அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்!

"வரலாறு தெரியாமல் பேசி குழப்பத்தை உண்டாக்க பார்க்கிறார் ரஜினி" என்று குற்றம் சாட்டியுள்ளார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்.

மதுரை அதிமுக மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பாவும், எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேசும் நேற்று திருப்பரங்குன்றத்தில் பொதுக்கூட்டம் நடத்தினர். தேர்தல் பிரச்சாரக் கூட்டம் போல பொதுக்கூட்டத்தை நடத்தினர். 

திண்டுக்கல் சீனிவாசன்

இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய திண்டுக்கல் சீனிவாசன், "பிறப்பு என்றிருந்தால் இறப்பு ஒன்று இருக்கும். இத்தொகுதியில் வெற்றி பெற்ற சீனிவேல், போஸ் நம்மைவிட்டு மறைந்திருக்கிறார்கள். வாஜ்பாய், கலைஞர் மறைந்துள்ளனர். அவர்களுக்கு இரங்கல் தெரிவித்தோம். அவர்களது ஆன்மா சாந்தியடைய விரும்பினோம்.

கலைஞர் இறந்தபோது முதலமைச்சருடன் நாங்கள்  இருக்கும்போது ஸ்டாலின் கொடுத்த கடிதத்தை கொண்டு வந்தார்கள். ஜெயலலிதா அடக்கம் செய்ததை எதிர்த்து போட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. அப்படிப்பட்ட சூழலில் கலைஞருக்கு இடம் ஒதுக்க முடியாது, சட்ட சிக்கல் உள்ளது என்று முதல்வர் சொன்னார்.

அதன் பின்பு வழக்குகள் வாபஸ் வாங்க காரணம் யார்?. இவங்களுக்கு தேவை என்றால் வழக்கு போடுவார்கள், பின்பு வாபஸ் வாங்குவார்கள். நாங்கள் நினைத்திருந்தால் அப்பீல் செய்திருக்கலாம். ஆனால்,  செய்யவில்லை. எங்களுக்கும் தந்தை, தாய் உள்ளதால் அதன் வேதனை எங்களுக்கு தெரியும். அனைத்து மரியாதையும் செய்ய உத்தரவிட்டவர் எடப்பாடி. இதில் என்ன குழப்பம் உள்ளது. ஆனால், நாங்கள் கலைஞருக்கு அஞ்சலி செய்தது பற்றி தெரியாமல், முதலமைச்சர் வந்திருக்க வேண்டாமா என்று ரஜினி கேட்கிறார். அம்மா மரணத்தின் இறுதி நிக்ழச்சிக்கு ஸ்டாலின் வந்தாரா?

அதிமுக ஆரம்பிக்க காரணமே கருணாநிதி தான். ரஜினிக்கு 69ல் நடந்த விஷயம் தெரியாது. திமுக அழிக்கப்பட வேண்டிய கட்சி என்று சொன்னவர் எம்.ஜி.ஆர். எங்கள் நம்பர் ஒன் எதிரியே திமுகதான். இதெல்லாம் தெரியாமல் ரஜினி குழப்பத்தை ஏற்படுத்த பார்க்கிறார்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!