வெளியிடப்பட்ட நேரம்: 14:30 (19/08/2018)

கடைசி தொடர்பு:14:30 (19/08/2018)

மதுரையில் அவள் விகடன் ஜாலி டே! கொண்டாட்டம்

மதுரை அவள் விகடன் 'ஜாலி டே வாசகிகள் திருவிழா வின் இறுதி கட்ட தேர்வு மதுரை லெட்சுமி சுந்தரம் ஹாலில் தொடங்கியது.

மதுரையில் ``அவள் விகடன்  ஜாலி டே" வாசகிகள் திருவிழாவை, வீனஸ் எலக்ட்ரானிக்ஸ், பவர்டு பை கலர்ஸ் தமிழ், எல்டியா ப்யூர் கோகனட் ஆயில், அசோசியேட் பார்ட்னர் உதயம் பருப்பு வகைகள் மற்றும் ரியோ கிராண்ட்ஸ்  இணைந்து வழங்குகின்றனர். இரண்டாம் நாளான இன்று  நடிப்பு, மிமிக்ரி, மெகந்தி, அடுப்பில்லா சமையல், கிராஃப்ட் வொர்க், டான்ஸ், பாட்டு, ரங்கோலி என வாசகிகள் தங்கள் திறமைகளால் நம்மை அசத்த வருகின்றனர். சின்னத்திரை நட்சத்திரங்கள் சித்திரா, அரவிந்த் நிகழ்ச்சியை தொகுத்துவழங்குகின்றனர். வடிவேல் பாலாஜி உள்ளிட்ட நகைச்சுவை கலைஞர்கள் மேடையை அலங்கரிக்க உள்ளனர். போட்டிகளில் வெற்றிபெற்ற நபர்களுக்கு பல பம்பர் பரிசுகள் காத்திருக்கின்றது என்பது குறிப்பிட தக்கது. விழாவில் கலந்துகொண்ட ஈரோடை சேர்ந்த வாசகி  பஞ்சவர்ணம் கூறுகையில் "இன்றைய ஞாயிறு அவள் ஜாலிடேவுடன் மகிழ்ச்சியாக செல்கிறது . தினமும் அடுப்பில் சலிப்பு தட்டிய குடும்ப பெண்களுக்கு அவள் ஜாலி டே பெரும் மகிழ்ச்சியை வழங்குகிறது. போட்டிகளில் பங்கேற்கவில்லை என்றாலும் இங்கு வந்து பார்ப்பதே பேரானந்தம் தான்" என்றார் .

நீங்க எப்படி பீல் பண்றீங்க