வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (19/08/2018)

கடைசி தொடர்பு:07:21 (20/08/2018)

`ஆறு மாதத்துக்கு நடிகர் சங்கத் தேர்தல் இல்லை' - நாசர் அறிவிப்பு

அக்டோபரில் நடக்கவேண்டிய நடிகர் சங்க தேர்தல் ஆறுமாதத்துக்குப் பிறகு நடைபெறும் என தென்னிந்திய நடிகர் சங்கத்தலைவர் நாசர் அறிவித்துள்ளார்.

நடிகர் சங்கம்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொதுக்குழு கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு நடிகர் சங்கத் தலைவர் நாசர் தலைமை வகித்தார். இந்தக் கூட்டத்தில்  நடிகர் சங்கத்தின் வரவு-செலவு கணக்குகளும் தாக்கல் செய்யப்பட்டன.

பொதுக்குழு

இதையடுத்து, நடிகர் சங்கத்தலைவர் நாசர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,`அனைவரும் ஒருமித்த குரலுடன் தேர்தல் வேண்டாம் என தெரிவித்துள்ளனர். நடிகர் சங்க கட்டடத்துக்கு 35 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. சூழ்நிலையைப் பயன்படுத்தி பதவியில் இருக்க வேண்டும் என்ற ஆசை எங்களுக்கு இல்லை. முன்உதாரணமாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஆறு மாதம் நிர்வாகம் நீட்டிக்கப்பட்டுள்ளது' என்று தெரிவித்தார். மலேசியா கிரிக்கெட் போட்டியில் உள்ள குற்றச்சாட்டுக்குப் பதில் அளித்த நாசர்,`குற்றச்சாட்டு யார் வேண்டுமானாலும் வைக்கலாம்.ஆனால், ஆதாரம் இருக்க வேண்டும். மாற்றுக்கருத்து உள்ளவர்களையும் நாங்கள் அரவணைத்துச் செல்கிறோம்' என்றார்.

விஷால்

விஷால் பேசுகையில்,`அனைவரும் தேர்தல் தேவை இல்லை என ஒருமித்த கருத்துடன் கூறியதற்கு நன்றி. அடுத்த வருடம் மார்ச் மாதத்துக்குள் கட்டடம் கட்டப்படும். மிகச் சிறப்பான முறையில் கட்டடம் கட்டிக்கொண்டு இருக்கிறோம்' என்று தெரிவித்தார். பொன்வண்ணன் பேசுகையில்,``கட்டடம் நல்லமுறையில் கட்டி, அதன் கணக்கு வழக்குகளை அடுத்த நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும். கட்டடம் கட்டி முடித்தபின் சிறப்புப் பொதுக்குழு கூட்டப்பட்டு சட்ட விதிகள் திருத்தம் செய்யப்படும்" என்று கூறினார்.