அதிகாலையில் கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய விஜயகாந்த்! | vijayakanth paying tribute to karunanidhi at this morning

வெளியிடப்பட்ட நேரம்: 07:43 (20/08/2018)

கடைசி தொடர்பு:07:44 (20/08/2018)

அதிகாலையில் கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய விஜயகாந்த்!

இன்று அதிகாலை அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பிய  விஜயகாந்த் மெரினாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் அஞ்சலி  செலுத்தினார்.

விஜயகாந்த்

தி.மு.க தலைவர் கருணாநிதி வயது மூப்பின் காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவால் கடந்த 7-ம் தேதி உயிரிழந்தார். அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அறிஞர் அண்ணாவின் நினைவிடத்துக்கு அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. கருணாநிதி இறந்து 15 நாள்களுக்கு மேலாகியும் அவரது நினைவிடத்தில் தொடர்ந்து பல்வேறு தரப்பினர் வந்து அஞ்சலி செலுத்திவிட்டுச் செல்கின்றனர்.

இந்த நிலையில், உடல் நலக்குறைவால் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று வந்த தே.மு.தி.க பொதுச் செயலாளர் விஜயகாந்த் இன்று காலை நாடு திரும்பினார். அதிகாலை சென்னை விமானநிலையம் வந்த அவர் அங்கிருந்து நேராக கருணாநிதியின் நினைவிடம் சென்று மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். அவருடன் மனைவி பிரேமலதா தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுதீஸ் ஆகியோர் இருந்தனர்.

முன்னதாக கருணாநிதி மறைவின்போது விஜயகாந்த் அழுதபடி அஞ்சலி செலுத்திய வீடியோ அனைவரும் மனதையும் கலங்கவைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.