பயிர்களுக்குத் தண்ணீர் இல்லாமல் தவிக்கும் பெலவர்த்தி கிராம மக்கள்..! | Krishnagiri pelavarthi village farmers suffering by drought

வெளியிடப்பட்ட நேரம்: 19:51 (20/08/2018)

கடைசி தொடர்பு:19:51 (20/08/2018)

பயிர்களுக்குத் தண்ணீர் இல்லாமல் தவிக்கும் பெலவர்த்தி கிராம மக்கள்..!

விவசாயி, தண்ணீர் பிரச்னை

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பெலவர்த்தி என்ற கிராமத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதில், 200 குடும்பங்கள் விவசாயத்தை நம்பியே வாழ்கின்றனர். இவர்கள் முழுக்க முழுக்க விவசாயம் மற்றும் அது சார்ந்த தொழில்களைத் தொடர்ந்து செய்து வருபவர்கள். பெலவர்த்தி மட்டுமல்லாமல் அந்தச் சுற்றுவட்டாரத்தில் மொத்தம் எட்டு கிராமங்கள் உள்ளன. அங்கு வசிக்கும் அனைத்து விவசாயிகளும் இந்த ஆண்டு மழையை நம்பி சோளம், நிலக்கடலை, துவரை போன்றவற்றைப் பயிரிட்டனர். ஒவ்வொரு விவசாயிகளும் அவர்களின் நிலத்துக்கு ரூ.15,000 முதலீடு செய்து பயிரிட்டுள்ளனர்.

பெலவர்த்தியில் உள்ள 320 ஏக்கர் நிலத்திலும் மழையை நம்பி பயிரிட்டனர். மழை பொய்த்துப்போனதால் அனைத்துப் பயிர்களும் கருகி விட்டன. இதனால், விவசாயிகள் பலருக்கும் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.இதனால், பிரதமர் நரேந்திர மோடியின் `பயிர் காப்பீட்டுத் திட்ட'த்தின் கீழ் 150 விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்குமாறு, கிருஷ்ணகிரி  மாவட்ட ஆட்சியர் கதிரவன் தலைமையில் நடந்த குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கையை வைத்தனர்.

தமிழகத்தில் ஒரு பக்கம் தண்ணீரும் மறுபக்கம் வறட்சியும் சூழ்ந்துள்ள நிலைதான் தற்போது!