பொதுக்குழுக் கூட்ட அறிவிப்புக்குப் பின் மெரினா வந்த ஸ்டாலின்!

தி.மு.க வின் பொதுக்குழுக் கூட்டத்துக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று (20-08-2018) இரவு ஸ்டாலின் மெரினாவில் உள்ள கருணாநிதியின் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செய்தார். 

ஸ்டாலின்

தி.மு.க தலைவர் கருணாநிதி கடந்த 7-ம் தேதி சென்னை காவேரி மருத்துவமனையில் காலமானார். அவரது உடல் மெரினாவில் உள்ள அண்ணா சமாதி அருகே அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. அதன் பின்னர் தி.மு.க-வின் அவசரச் செயற்குழுக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கருணாநிதிக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஆண்டுக்கு ஒருமுறை பொதுக்குழு கூட்ட வேண்டும். அதன் அடிப்படையில் தி.மு.க-வின் பொதுக்குழுக் கூட்டம் வரும் 28-ம் தேதி நடைபெறும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.  அண்ணா அறிவாலயத்தில் காலை 9 மணிக்கு பொதுக்குழுக் கூட்டம் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் செயல் தலைவராக உள்ள ஸ்டாலின், தி.மு.க வின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் எனத் தெரிகிறது. மேலும், கட்சியின் சில முக்கியப் பொறுப்புகளுக்கும் நிர்வாகிகள் அறிவிக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது. 

கருணாநிதி சமாதி

பொதுக்குழு தொடர்பான அறிவிப்பு மாலையில் வெளியாக, இரவு 8 மணியளவில் ஸ்டாலின் திடீரென மெரினாவில் உள்ள கருணாநிதி சமாதிக்கு வந்தார். அவருடன் செல்வி, மு.க தமிழரசு, அருள்நிதி, துரைமுருகன், டி.ஆர் பாலு ஆகியோரும் வந்தனர். அவர்கள் கருணாநிதி சமாதியில் மலர் தூவி மரியாதை செய்தனர். குடும்ப உறுப்பினர்கள் சிறிது நேரம் அங்கு அமர்ந்துவிட்டு, பின்னர் புறப்பட்டுச் சென்றனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!