வெளியிடப்பட்ட நேரம்: 13:20 (21/08/2018)

கடைசி தொடர்பு:13:20 (21/08/2018)

எல்.கே.ஜி மாணவனின் பொழுதுபோக்கு வலைபோட்டு மீன்பிடித்தல்! #VikatanPhotoStory

மீன் பிடித்தல்

விடுமுறை நாள் வந்தால், ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதத்தில் கழிப்பார்கள். கார்ட்டூன், வீடியோ கேம்ஸ், நண்பர்களோடு விளையாட்டு இப்படிச் சிலர் விடுமுறை நாள்களில் வீட்டைவிட்டு வெளியில் வராமல் தூங்குவதும் உண்டு. இவர்களுக்கு மத்தியில், 4 வயதுச் சிறுவனான ரோகேஷ், தனது விடுமுறை நாள்களை எவ்வாறு கழிக்கிறான் தெரியுமா?

விழுப்புரம் மாவட்டம், சி.சந்தைப்பேட்டையைச் சேர்ந்த ரோகேஷ், எல்.கே.ஜி. படிக்கிறான். ரோகேஷின் தாத்தா மீன் பிடிப்பவர். அதனால், மீன் பிடிப்பது ரோகேஷின் விருப்பமான பொழுதுபோக்காகவும் உள்ளது. ரோகேஷின் ஒரு நாள் எப்படி இருக்கும் எனப் பார்ப்போமா!

மீன் பிடித்தல்

தாத்தாவுடன் சேர்ந்து மீன்பிடி வலையின் சிக்கல்களை விடுவிக்க உதவுகிறான் ரோகேஷ். தானே சுயமாக வலையைப் பராமரிக்கவும் கற்றுள்ளான். 

மீன் பிடித்தல்

தனக்கான குட்டி வலையைச் சீராக்கி, மீன் பிடிக்க தயாராகிறான் ரோகேஷ். 

மீன் பிடித்தல்

தாத்தாவோடு மீன் பிடிக்கும் இடத்துக்கு ஜாலியாகப் பாட்டுப் பாடியவாறு கிளம்புகிறான் ரோகேஷ்.

மீன் பிடித்தல்

வழியில் வேடிக்கை பார்ப்பதில் ஆர்வமானதால், தாத்தா முன்னால் சென்றுவிடுகிறார். சுதாரித்து, குடுகுடு என ஓடிப்போய் அவருடன் இணைந்துகொள்கிறான் ரோகேஷ். 

மீன் பிடித்தல்

மீன் பிடிக்கும் ஏரிக்கும் வந்தாச்சு. தன் வலையை எடுத்து விரிக்கிறான் ரோகேஷ். 

மீன் பிடித்தல்

கரையில் நின்று லாகவமாக வலையை வீசுகிறான் ரோகேஷ்.  

மீன் பிடித்தல்

அடடா! அந்த இடத்தில் மீன்கள் சிக்கவில்லை. பயல் அசரவில்லை. சின்னப் பாறை மீதேறி புதிய இடத்தில் வலை வீசுகிறான்.  

மீன் பிடித்தல்

அப்பாடா! மீன்கள் கிடைத்துவிட்டன. அவற்றைக் கூடையில் பத்திரப்படுத்துகிறான்.

மீன் பிடித்தல்

தான் பிடித்த மீன்களுடன் தாத்தா வர, அவரின் வலையில் இருக்கும் மீன்களையும் சேகரிக்கிறான் ரோகேஷ்.

மீன் பிடித்தல்

மீன் பிடித்த களைப்பு. அதனால், குட்டி மீனாகத் துள்ளி, தாத்தாவைத் தூக்கிக்கொள்ளச் சொல்கிறான் ரோகேஷ். 

மீன் பிடித்தல்

வீட்டுக்குச் செல்லும் வழியில் தாத்தாவின் நண்பர் கொடுத்த சைக்கிளில் பயணம். 

குழந்தைகளின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுவது பெற்றோரின் பொறுப்பும் கடமையும்தானே! 


டிரெண்டிங் @ விகடன்