‘கேரள மக்களுக்கான அவசர உதவி இது!’ - நெகிழவைத்த நல்லகண்ணு பேத்தி | Kerala Floods: Communist leader Nallakkannu Grand Daughter Contribute Reliefs

வெளியிடப்பட்ட நேரம்: 16:36 (21/08/2018)

கடைசி தொடர்பு:16:36 (21/08/2018)

‘கேரள மக்களுக்கான அவசர உதவி இது!’ - நெகிழவைத்த நல்லகண்ணு பேத்தி

கேரள மாநிலம் இயற்கையின் கோரப்பிடியில் சிக்கியுள்ளது. பருவமழையின் தீவிரத்தால் கனமழை பொழிந்துள்ளது. 100 வருடங்களில் வரலாறு காணாத மழை என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாகப் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். அரசியல் கட்சிகள், சினிமா பிரபலங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பொதுமக்கள் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்துவருகின்றனர். 

கேரளா வெள்ளம்

கோவையைச் சேர்ந்த சங்கமம் என்ற அமைப்பின் நிர்வாகிகள்  வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வந்தனர். தங்களுக்கு நிவாரணம் பொருள்கள் வழங்கிய பெண் குறித்த சுவாரஸ்யமான தகவலை அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து நம்மிடம் பேசிய சங்கமம் அமைப்பின் நிர்வாகி ஒருவர், “வயநாடு பகுதியில் உள்ள நிவாரண முகாம்களில் பொருள்களை வழங்கும் பணிகளை மேற்கொண்டு இருந்தோம். அப்போது தொலைபேசியில் ஓர் அழைப்பு வந்தது. கோவையிலிருந்து பேசுவதாகவும் கேரளத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருள்களைத் திரட்டித் தருவதாகவும் அதை முகாம்களுக்குக் கொண்டு போய்ச் சேர்க்க முடியுமா எனக் கேட்டார். நாங்களும் சம்மதித்தோம். உடனே என்னென்ன பொருள்கள் வேண்டும் என அந்தப் பெண்மணி விசாரித்தார்.
 

இதையடுத்து அவரது விலாசத்துக்குக் கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்றோம். மருதமலைப் பகுதியில் இருந்த அந்த அடுக்குமாடி குடியிருப்பு பகுதியினர் எங்களை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.கேரள நிவாரணத்துக்குத் திரட்டிய பொருள்களைக் காண்பித்து, அவசரத்தில் இவ்வளவு தான் முடிந்தது அடுத்த முறை போவதாக இருந்தால் இன்னும் திரட்டிக் கொடுக்க முடியும் என அந்தப் பெண்மணி தெரிவித்தார். இறுதியாக எங்களிடம் பேசியவர், நான் ஐயா நல்லகண்ணு பேத்தி. என் பெயர் ரஞ்சனி கண்ணம்மா என அறிமுகப்படுத்திக்கொண்டார். இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை நிவாரணப்பொருள்களுடன் புகைப்படம் எடுக்க அழைத்தும் அவர் மறுத்துவிட்டார்.