அலட்சியத்தால் தொடரும் பலிகள்... பணியின்போது இன்ஜினீயருக்கு நடந்த துயரம்

அரசு சிமென்ட் ஆலை விரிவாக்கப் பணியின்போது மேற்பார்வையாளர் உயிரிழந்த சம்பவம் அரியலூரில் நடந்துள்ளது. அரசின் அலட்சியத்தால் பல உயிர்கள் பறிபோவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

இன்ஜினீயர் சதாம் உசேன்

அரியலூர் மாவட்டத்தில், அரசு சிமென்ட் ஆலை கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டுவருகிறது. இந்த நிலையில், ஆலையை நவீனப்படுத்துவதற்காக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 750 கோடி ரூபாய் ஒதுக்கினார். அதன் விரிவாக்கப்பணி அதிவேகமாக நடைபெற்றது வருகிறது. இந்நிலையில், டிப்ளமோ மெக்கானிக் இன்ஜினீயரிங் முடித்த சதாம் உசேன் என்பவர், ஆலையில் மேற்பார்வையாளர் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, மூன்றாவது லேயரில் இருந்த இரும்பு ராடு தலையில் விழுந்ததில் படுகாயமடைந்த சதாம் உசேன், தலை மற்றும் மார்புப் பகுதியில் அடிப்பட்டு சம்பவயிடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து கயர்லாபாத் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். 

"இங்கு வேலை பார்க்கும் தொழிலாளர்களின் அலட்சியத்தால்தான் விபத்து நடந்தது.  இப்படி இன்னும் எத்தனை உயிர்களைத்தான் பலி கொடுக்கப்போகிறோமோ எனத் தெரியவில்லை" என்று குற்றம் சாட்டுகிறார்கள் பொதுமக்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!