சாரங்கன் உள்ளிட்ட 16 ஐ.பி.எஸ் அதிகாரிகள் அதிரடி பணியிட மாற்றம் - தமிழக அரசு உத்தரவு!

தமிழகத்தில் 16 ஐ.பி.எஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவுப் பிறப்பித்துள்ளது.

சாரங்கன், சைலேஷ் குமார் யாதவ் உள்ளிட்ட 16 ஐ.பி.எஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து தமிழக உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்ட்டின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி, தென் சென்னை கூடுதல் ஆணையர் சாரங்கன் மாநிலக் குற்ற ஆவண காப்பக ஐ.ஜி-யாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஏ.டி.ஜி.பி சைலேஷ்குமார் யாதவ் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் ஏ.டி.ஜி.பி-யாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். போக்குவரத்து காவல் ஏ.டி.ஜி.பி-யாக அருணாச்சலம், வடக்கு மண்டல ஐ.ஜி-யாக நாகராஜன் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், தென் சென்னை கூடுதல் ஆணையராக மகேஷ்குமார் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார். தினகரன் வட சென்னை சட்டம் ஒழுங்கு கூடுதல் கமிஷனராகவும் ஜெயராம் நிர்வாக ஐ.ஜி-யாகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களைப்போல் சுமித் சரண் அமலாக்கத்துறை ஐ.ஜி-யாகவும், ஜெயலட்சுமி வணிக குற்றப் புலனாய்வு பிரிவு எஸ்.பி-யாகவும், தங்கதுரை சேலம் சட்டம் ஒழுங்கு துணை கமிஷனராகவும், சமூக நீதி மற்றும் மனித உரிமை துணை ஐ.ஜி-யாக சுப்புலட்சுமியம், தமிழக ஆயுதப்படை எஸ்.பி-யாக விஜயலட்சுமியம் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஐ.பி.எஸ் அதிகாரி வெண்மதி தமிழக போலீஸ் சிறப்பு படை கமாண்டன்ட் பிரிவுக்கும், மத்திய விசாரணை பிரிவு எஸ்.பி-யாக வந்திதாபாண்டேவும், சேலம் குற்றம் மற்றும் போக்குவரத்து பிரிவு துணை கமிஷனராக சியாமளா தேவியும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் சமீபத்தில் ஐ.ஜி மீது பாலியல் புகார் அளித்த பெண் எஸ்.பி-யும் மாற்றப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் கூடுதல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!