வெளியிடப்பட்ட நேரம்: 21:40 (21/08/2018)

கடைசி தொடர்பு:21:40 (21/08/2018)

`ஐ.ஜி மீதான குற்றச்சாட்டை விஷாகா தீர்ப்பின் அடிப்படையில் விசாரிக்க வேண்டும்!’ - உ.வாசுகி வலியுறுத்தல் 

பெண் எஸ்.பி-யை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தல் செய்த புகாரில் ஐ.ஜி மீதான குற்றச்சாட்டை விசாரிக்க, டி.ஜி.பி உத்தரவிட்ட விவகாரம் பரபரப்பை உண்டாக்கியுள்ள நிலையில், அந்த விசாரணைக் குழு விஷாகா கமிட்டி விதிகளின் அடிப்படையில் அமையவில்லை என சி.பி.எம்-மின் மத்திய குழு உறுப்பினர் உ.வாசுகி குற்றம்சாட்டியுள்ளார்.  

உ.வாசுகி

பெண் எஸ்.பி-யிடம் வரம்பு மீறி நடந்துகொண்டார் என்ற குற்றச்சாட்டுக்கு ஐ.ஜி ஒருவர் உள்ளாகியுள்ளார். பாதிக்கப்பட்டஎஸ்.பி உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்ததால், பெண்கள் பாலியல் துன்புறுத்தல் பிரச்னையை விசாரிக்க அமைக்கப்பட்ட விஷாகா கமிட்டி மூலம் ஏ.டி.ஜி.பி சீமா அகர்வாலை விசாரிக்க டி.ஜி.பி உத்தரவிட்டார். 

இதுகுறித்து நம்மிடம் பேசிய உ.வாசுகி, ``இதுபோன்ற பிரச்னைகளில் விசாரிக்கும்போது சம்பந்தப்பட்ட துறையில் இருப்பவர்களோடு பெண்கள் அமைப்பின் பிரதிநிதியை அல்லது இப்பிரச்னைகளைக் கையாண்ட அனுபவம் மிக்க ஒரு நபரை விசாரணைக் குழுவில்  இணைக்க வேண்டும் எனச் சட்டம் சொல்கிறது. அப்படி இந்தக் குழுவில் யார் இடம் பெற்றுள்ளார் என விசாரித்ததில் காவல்துறையில் பணி செய்து ஓய்வுபெற்ற சரஸ்வதி என்ற கூடுதல் எஸ்.பி-யைச் சொல்கிறார்கள். இது சரியல்ல. விசாரணை செய்யும் அனைவரும் குறிப்பிட்ட துறைக்குள்ளாகவே இருக்கக் கூடாது என்பதால்தான், உச்ச நீதிமன்ற விஷாகா தீர்ப்பில், `THIRD PARTY REPRESSENTATIVE’ என்ற CONCEPT உருவாக்கப்பட்டது. 2013 சட்டத்திலும் முதலில், `NON GOVERNMENTAL ORGANISATION/ASSOCIATION’ என்றுதான் கூறப்பட்டுள்ளது.  தமிழகத்தில் பெண்கள் அமைப்புகள் இல்லையா? இத்தகைய பிரச்னைகளில் தலையீடு செய்த, போராடிய அமைப்புகள் எத்தனையோ உண்டு. தனிநபர்களும் உண்டு. ஆனால், இவர்களை எல்லாம் விட்டுவிட்டு, அந்தத் துறையிலேயே வேலைபார்த்து ஓய்வு பெற்றவரை, இப்பிரச்னைகளைக் கையாண்டு அனுபவம் மிக்க தனிநபர் என்று சேர்ப்பது என்ன நியாயம்? இதுபோன்ற பிரச்னைகளில் காவல்துறை கையாளும் விதமும் இயக்கங்கள் கையாளும் விதமும் ஒன்றா. மடியில் கனம் இல்லை என்றால் வழியில் பயம் எதற்கு? இது விஷாகா தீர்ப்பின் சாராம்சத்துக்கு எதிரானது. எனவே, விஷாகா விதிகளில் ஒத்துவருவதாகக் குழுவின் காம்போசிஷன் இருக்க வேண்டும் என்று டி.ஜி.பி-யிடம் வலியுறுத்துகிறோம்'' என்றார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க