ஒரே ஆண்டில் மூன்றாவது முறையாக முழுக் கொள்ளவை எட்டிய மேட்டூர் அணை!

சேலம் மாவட்டத்திலுள்ள மேட்டூர் அணை, இந்த ஆண்டில் மட்டும் மூன்றாவது முறையாக முழுக் கொள்ளவை எட்டியுள்ளது. 

மேட்டூர் அணை

தென் மேற்குப் பருவ மழை தீவிரம் அடைந்ததை அடுத்து கர்நாடகம் மற்றும் கேரளாவில் பெய்த கனமழையின் காரணமாகக் கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர், ஹாரங்கி போன்ற அணைகள் நிரம்பி தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அதனால் தமிழகத்துக்கு நீர்வரத்து கடந்த சில நாள்களாகவே ஒரு லட்சம் கன அடிக்கு மேல் வந்தது. இதனால் காவிரி ஆற்றில் பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

ஒகேனக்கல் காவிரி ஆற்றின் கரையோரக் கிராமங்களில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்தது. காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்ததால் அந்த அணைகளுக்கு நீர்வரத்தும் குறைந்தது. இதனால் அந்த அணைகளில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. 2 அணைகளில் இருந்தும் இன்று காலை தண்ணீர் திறப்பு 97,858 கன அடியாகக் குறைக்கப்பட்டது. ஒகேனக்கல்லுக்கு வரும் தண்ணீர் நேராக மேட்டூர் அணைக்கு வருகிறது. மேட்டூர் அணைக்கு நேற்று காலை 1,80,000 கன அடி தண்ணீர் வந்த நிலையில் இன்று காலை நீர்வரத்து 80,000 கன அடியாகக் குறைந்தது. இன்று காலையில் தண்ணீர் திறப்பு 50,000 கன அடியாகக் குறைக்கப்பட்டது. எனினும், நீர்வரத்து தொடர்ந்து 80,000 கன அடியாக இருந்ததால் மேட்டூர் அணை மீண்டும் முழுக் கொள்ளளவை எட்டியது. இந்த ஆண்டில் மட்டும் மூன்றாவது முறையாக மேட்டூர் அணை நிரம்பியுள்ளது. தற்போது அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 65,000 கன அடியாக உள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!