கேரள மக்களுக்காக மதுரையில் சிறப்புத் தொழுகை !

பக்ரீத் பண்டிகை எனும் தியாகத் திருநாள்   ஹஜ்ஜுப் பெருநாள். உலக இஸ்லாமியர்களால் அரேபிய மாதமான துல்ஹஜ் பிறை பத்தாம் நாள் கொண்டாடப்படுகிறது.

கேரளா

'தியாகத் திருநாளில் சொந்தபந்தங்களுடன் உறவாடுதல், ஏழை எளியோருக்குக் கொடுத்து உதவி அதன்மூலம் உவகை அடைவது, இறைவனைப் புகழ்ந்து துதிப்பது போன்ற நல்ல அம்சங்கள்தான் திருநாளாக கொண்டாப்படுகிறது. இந்த நிலையில், கேரளாவில் இயல்பு வாழ்க்கை திரும்புவதற்காக இஸ்லாமியர்கள் ஆயிரக்கணக்கானோர் மதுரை தமுக்கம் திடலில் பக்ரீத் சிறப்புத் தொழுகை செய்தனர்.

பக்ரீத் திருநாளை முன்னிட்டு மதுரையில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் எஸ்.டி.பி.ஐ.கட்சி சார்பிலும்18 இடங்களில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பிலும் சிறப்பு ஈகைப் பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது. தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமிய ஆண்கள், பெண்கள், குழந்தைகள், புத்தாடைகள் உடுத்தி கலந்துகொண்டனர். சிறப்புத் தொழுகையில் பங்கு பெற்றவர்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்கள் இயல்பு வாழ்வுக்குத் திரும்ப வேண்டும் என இறைவனை பிரார்த்திப்பதாக கூறினார்கள்.

தொழுகைக்குப் பின் இஸ்லாமிய தோழர்கள் சிலர் நம்மிடம் பேசுகையில் ``மனிதர்கள் அனைவரும் சமம். அன்பு என்பது மதம், மொழி, ஜாதி என்ற பல்வேறு பிரிவுகளையும் ஒன்றினைக்கக் கூடியது. கேரள மக்கள் மழை வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு எந்த ஒரு பாகுபாடும் இன்றி பல்வேறு தரப்பினர் உதவி செய்துவருகின்றனர். இன்றைய தியாக நாளில் அவர்களுக்காகவும் இறைவனிடம் பிரார்த்தனை செய்துகொண்டதாக தெரிவித்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!