பா.ஜ.க அலுவலகத்தில் வாஜ்பாய் அஸ்தி - ஸ்டாலின், கனிமொழி நேரில் அஞ்சலி | DMK Working President M.K.Stalin Paid his Tribute to Atal Bihari Vajpayee

வெளியிடப்பட்ட நேரம்: 14:40 (23/08/2018)

கடைசி தொடர்பு:14:40 (23/08/2018)

பா.ஜ.க அலுவலகத்தில் வாஜ்பாய் அஸ்தி - ஸ்டாலின், கனிமொழி நேரில் அஞ்சலி

சென்னையில் உள்ள பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள வாஜ்பாயின் அஸ்திக்கு தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். 

ஸ்டாலின்

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் அஸ்தியை அனைத்து மாநிலங்களிலும் உள்ள முக்கிய நதிகளில் கரைக்க பா.ஜ.க முடிவு செய்தது. இதையடுத்து நேற்று டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அனைத்து மாநில பா.ஜ.க தலைவர்களிடமும் வாஜ்பாயின் அஸ்தி அளிக்கப்பட்டது. தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அஸ்தியை விமானம் மூலம் சென்னை கொண்டுவந்தார். பிறகு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வைத்து ஊர்வலமாக பா.ஜ.க அலுவலகம் கொண்டு செல்லப்பட்டது. 

கனிமொழி

வரும் 26-ம் தேதி தமிழகத்தின் மதுரை, திருச்சி, சென்னை, கன்னியாகுமரி, ராமேஸ்வரம், ஈரோடு ஆகிய ஆறு இடங்களில் உள்ள முக்கிய நதிகளில் கரைக்கப்பட உள்ளது. அதுவரை பா.ஜ.க தலைமை அலுவலகத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வாஜ்பாயின் அஸ்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று காலை முதல் வாஜ்பாயின் அஸ்தி வைக்கப்பட்டுள்ள பா.ஜ.க அலுவலகத்துக்குப் பல தலைவர்கள் வந்து அஞ்சலி செலுத்திவிட்டுச் செல்கின்றனர். அதன்படி தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின், தி.மு.க எம்.பி கனிமொழி, தி.மு.க முன்னாள் எம்.பி, டி.ஆர் பாலு, தி.மு.க-வின் முன்னாள் மத்திய இணையமைச்சர் தயாநிதி மாறன் ஆகியோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். நடிகர்கள் ஒய்.ஜி. மகேந்திரன், ராதாரவி ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.