எம்.ஜி.ஆர் நினைவு வளைவு - முதல்வர், துணை முதல்வர் அடிக்கல் நாட்டினர்

சென்னை காமராஜர் சாலையில் அமைக்கப்படவுள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நினைவு வளைவுக்கு இன்று அடிக்கல் நாட்டப்பட்டது. 

நினைவு வளைவு

மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நூறாவது ஆண்டு பிறந்தநாள் கொண்டாட்டங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக சென்னை கடற்கரைக்கு அருகில் உள்ள காமராஜர் சாலையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நினைவு வளைவு அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், சபாநாயர் தனபால் ஆகியோர் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினர். இந்த விழாவில் மூத்த அமைச்சர்கள், எம்.பி-க்கள் மற்றும் எம்.எல்.ஏ-க்கள், அ.தி.மு.க தொண்டர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். 

நினைவு வளைவு

இந்த வளைவு 66 அடி அகலமும் 52 அடி உயரத்துடன் பல்வேறு சிற்ப வேலைப்பாடுகள் கொண்டு அமைக்கப்பட உள்ளது. இதற்கான அடுத்தகட்ட பணிகள் விரைவில் தொடங்க உள்ளனர். இன்றைய விழாவில் நினைவு வளைவின் மாதிரி படமும் வைக்கப்பட்டிருந்தது. மேலும், இந்த வளைவு கடற்கரை சாலையில் அமைய உள்ள இரண்டாவது வளைவு ஆகும். முன்னதாக சட்டப்பேரவை வைர விழா வளைவை கடந்த 2013-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா திறந்துவைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!