அறநிலையத் துறை ஆணையர் இடமாற்றம் - அன்றே கணித்த விகடன்! | Hrnce commissioner Transfer - vikatan predicted

வெளியிடப்பட்ட நேரம்: 20:08 (23/08/2018)

கடைசி தொடர்பு:21:21 (23/08/2018)

அறநிலையத் துறை ஆணையர் இடமாற்றம் - அன்றே கணித்த விகடன்!

இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் ஜெயா, பாடக் கல்வித்திட்ட செயலாளர் உதயசந்திரன் உட்பட, தமிழகத்தில் உள்ள மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம்செய்து உத்தரவிட்டிருக்கிறது தமிழக அரசு.

அறநிலையத்துறை ஆணையர்

2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறநிலையத் துறையின் ஆணையராகப் பொறுப்பேற்றார் ஜெயா. சிலை கடத்தல் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளில் இவரது செயல்பாடு திருப்திகரமாக இல்லை என்பதால், விரைவில் அறநிலையத் துறை ஆணையராக இருக்கும் ஜெயா மாற்றப்படலாம் என்பதுகுறித்து மூன்று தினங்களுக்கு முன் விகடன் இணையதளம் பிரத்யேகமாக செய்தி வெளியிட்டிருந்தது. அவர் மாற்றப்படுவதற்கான பின்னணி குறித்தும் அதில் விரிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஜெயா, தமிழ்நாடு தொழில்கிடங்குத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருடன் சேர்த்து தமிழகத்தின் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அண்ணா மேலாண்மை நிறுவனத்தின் இயக்குநர் டி.கே.ராமச்சந்திரன், ஐ.ஏ.எஸ் அறநிலையத் துறையின் முதன்மைச் செயலாளராகவும் அதன் ஆணையராகவும் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். இன்னும் பலர், பல்வேறு துறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.


[X] Close

[X] Close