``கரும்பு வித்த காசு எப்பதான் கிடைக்கும்?” - கண்ணீர் விடும் விவசாயிகள்!

கரும்பை ஆலைக்குக் கொடுத்தும் எங்களின் கஷ்டம் தீரவில்லை. எங்கள் வயிற்றில் அடிக்கும் ஆலை மீது நடவடிக்கை எடுக்கமுடியாத நிர்வாகம்தான் செயல்பட்டுக் கொண்டிருப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றார்கள்.

கரும்பு விவசாயிகள் சிவகங்கை

சிவகங்கை  கரும்பு விவசாயிகளுக்கு 2017-18 ஆகிய ஆண்டுகளுக்குத் தரவேண்டிய பாக்கித் தொகை ரூ1.74 கோடியை தர வேண்டும். கடந்த நான்கு வருடங்களாக விவசாயிகளிடம் கூட்டுறவுக் கடன் மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கடன் தொகைக்குக் கரும்பு விவசாயிகளிடம் பணத்தைப் பிடித்தம் செய்த தொகை ரூ 6.38 கோடியை சக்தி சர்க்கரை ஆலை நிர்வாகம் வங்கிகளில்  செலுத்தவில்லை.

கரும்பு விவசாயிகளிடம் வங்கிக் கடனுக்காக சக்தி சர்க்கரை ஆலை நிர்வாகம் பிடித்தம் செய்த தொகை ரூ 6.38 கோடி வங்கிகளில் கட்டவில்லை. இதன் காரணமாக வங்கிகளில் வரவு- செலவு செய்யமுடியாத நிலை கரும்பு விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது. இப் பிரச்னை தொடர்பாகக் கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத்தலைவர் தண்டியப்பன், மாவட்டச் செயலாளர் சக்திவேல், வழக்கறிஞர் செந்தில், தர்மராஜ் ஆகியோர் கோட்டாட்சியர் செல்வகுமாரியிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தையில் கரும்பு பாக்கி அனைத்தும் செப்டம்பர் 15-க்குள் தீர்வு காணப்படும். வங்கிகளில் நடக்க உள்ள நகை ஏலத்தை ரத்து செய்து நகையைத் திருப்பிவைக்க அதிகாரிகள் ஏற்றுக்கொண்டனர். லாடனேந்தல் கனரா வங்கி கிளையில் வருகிற ஆகஸ்ட் 27 -ம் தேதி நடக்க இருந்த நகை ஏலம் நடைபெறாது என வங்கியின் முன்னோடி அதிகாரி உறுதிகொடுத்துள்ளார். இதன் காரணமாக கனரா வங்கியின் நகை ஏலம் கிடையாது என்பதை அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!