விவசாயிகள் தற்கொலை: தமிழகம் பிடித்துள்ள இடம்? | farmers suicides rate has been increasing

வெளியிடப்பட்ட நேரம்: 09:21 (24/08/2018)

கடைசி தொடர்பு:09:24 (24/08/2018)

விவசாயிகள் தற்கொலை: தமிழகம் பிடித்துள்ள இடம்?

நாட்டில் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருவதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது.

தமிழகம் - விவசாயிகள் தற்கொலை

விவசாயிகளின் தற்கொலை சம்பவங்களைத் தடுக்க மத்திய அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இருந்த போதிலும், விவசாயக் கடன், இயற்கை பேரிடர் உள்ளிட்ட காரணங்களால் நாட்டில் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரை 11,441 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். அதில், மகாராஷ்டிரா மாநிலம் முதல் இடத்தில் உள்ளது. இதைத் தொடர்ந்து, கர்நாடகா மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன. 

கர்நாடகாவில் 3,740 விவசாயிகள், மத்தியப் பிரதேசத்தில் 3,578 விவசாயிகள், ஆந்திரப் பிரதேசத்தில் 3,562 விவசாயிகள், தெலங்கானாவில் 2,747 விவசாயிகள், கேரளாவில் 1,989 விவசாயிகள் என உயிரிழந்துள்ளனர். இந்தப் பட்டியலில், தமிழகமும் இடம் பெற்றுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தைத் தொடர்ந்து எட்டாவது இடத்தில் தமிழகம் உள்ளது. 2013-2015 வரை தமிழகத்தில் 1,606 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதாகப் பதிவாகியுள்ளது. தமிழகத்தைத் தொடர்ந்து, குஜராத், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப், பீகார் மற்றும் கோவா ஆகிய மாநிலங்கள் உள்ளன.