வெளியிடப்பட்ட நேரம்: 12:15 (24/08/2018)

கடைசி தொடர்பு:12:15 (24/08/2018)

தூத்துக்குடி ம.தி.மு.க நிர்வாகிகள் மாற்றம்! வைகோ அறிவிப்பு

 

வைகோ

``தூத்துக்குடி மாவட்டக் கழகம், ம.தி.மு.க நிர்வாக வசதிக்காக வடக்கு - தெற்கு என்று இரண்டு மாவட்டங்களாக அமைக்கப்படுகிறது'' என ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, இன்று வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளார். புதிய நிர்வாகிகளையும் வைகோ அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், `` தூத்துக்குடி வடக்கு மாவட்டம் அவைத் தலைவர் - டி.எஸ்.எம்.சம்பத்குமார், மாவட்டப் பொறுப்பாளர் ஆர்.எஸ்.ரமேஷ், மாவட்டப் பொருளாளர் - செண்பகப் பெருமாள், மாவட்டத் துணைச் செயலாளர்கள் பவுன் மாரியப்பன், வழக்கறிஞர் ஆர்.குருசாமி கிருஷ்ணன், எஸ்.செல்வராஜ், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர்  வழக்கறிஞர் ஆர்.பரமசிவம். தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில்  தூத்துக்குடி, கோவில்பட்டி, விளாத்திகுளம் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டதாகும்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அவைத் தலைவர் குரு.மத்தேயு ஜெபசிங், மாவட்டப் பொறுப்பாளர் வழக்கறிஞர் புதுக்கோட்டை பி.செல்வம், மாவட்டப் பொருளாளர் - காயல் அமானுல்லா, மாவட்டத் துணைச் செயலாளர்கள் - ஆத்தூர் ஐ.லட்சுமணன், வீரபாண்டி வி.பி.செல்லச்சாமி, பேரூர் சு.சிவஞானவேல். தூத்துக்குடி தெற்கு மாவட்டத்தில் திருச்செந்தூர், திருவைகுண்டம், ஓட்டப்பிடாரம் ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டதாகும்'' என்று கூறியுள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க