பரபர அரசியல் பணிகளுக்கு இடையே படிப்பு! - இனி இவர் முனைவர் திருமாவளவன்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.  

திருமாவளவன்
 

சென்னை மாநிலக் கல்லூரியில் இளநிலை வேதியியல், சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ., குற்றவியல், சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பு. தற்போது முனைவர் பட்டம். அதுவும் கெளரவ பட்டம் அல்ல. ஆராய்ச்சி (Phd) மேற்கொண்டு பெற்ற பட்டம்.  ஆம், திருமாவளவன் இன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். 

திருமாவளவன்
 

`மீனாட்சிபுரம் மதமாற்றங்கள் ஒரு ஆய்வு’ என்பதுதான் அவரது ஆய்வின் தலைப்பு. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சொக்கலிங்கம்தான் திருமாவின் பிஹெச்.டி வழிகாட்டி. பரபரப்பான அரசியல் சூழலிலும் பொறுப்பாக ஆய்வுப் படிப்பை முடித்து இன்று அனைத்து தரவுகளையும் பல்கலையில் சமர்ப்பித்துவிட்டார். இறுதி வாய்மொழித் தேர்வையும் (viva) நிறைவு செய்திருக்கிறார். 

நெல்லை மாவட்டத்தில் செங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மீனாட்சிபுரத்தில் 1981-ம் ஆண்டு நூற்றுக்கணக்கானோர் மதம் மாறினர். இந்த நிகழ்வு நாடு முழுவதும் பெரும் விவாதங்களைக் கிளப்பியது. மதம் மாறிய அனைவரும் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இதுகுறித்து விரிவான ஆய்வை மேற்கொண்டார் திருமாவளவன். ஆய்வுக்காக மேற்கொண்ட கள ஆய்வில் நூற்றுக்கும் மேற்பட்டோரிடம் நேரடியாகத் தகவல்களைச் சேகரித்துள்ளார்.  

திருமாவளவன்
 

இன்று அனைத்து தரவுகளையும் சமர்ப்பித்து ஆய்வை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் அவருக்கு முனைவர் பட்டம் வழங்கியுள்ளது. தமிழக அரசியலில், படித்து முனைவர்  பட்டம் பெற்றவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.  திருமாவளவன் இனி முனைவர் திருமாவளவன்! வாழ்த்துகள்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!