புளூடூத் உதவியுடன் ஐஏஎஸ் தேர்வில் காப்பியடித்த விவகாரம் - ஐபிஎஸ் அதிகாரி பணி நீக்கம்!

புளூடூத் உதவியுடன் ஐஏஎஸ் தேர்வில் காப்பியடித்தாகக் கைதான ஐபிஎஸ் அதிகாரி சபீர் கரீமை பணியிடை நீக்கம்செய்து உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

ஐபிஎஸ் அதிகாரி சபீர் கரீம்

மத்தியப் பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் ஐஏஎஸ் மெயின் தேர்வு, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 30-ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்வை ஐபிஎஸ் தேர்வில் வெற்றிபெற்ற கேரள மாநிலத்தைச் சேர்ந்த சபீர் கபீர் என்பவர் எழுதினார். சென்னை மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இவருக்கு தேர்வறை ஒதுக்கப்பட்டிருந்தது. தேர்வின்போது கரீம், ப்ளூடூத் ஹெட்செட்டைப் பயன்படுத்தி ஹைடெக் முறையில் காப்பி அடித்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் தேர்வறையில் இருந்து வெளியேற்றப்பட்டார். பின்னர் இதுகுறித்த புகாரின் பேரில் அவர் கைதுசெய்யப்பட்டார். ஐஏஎஸ் தேர்வில் மோசடிசெய்த அவர், பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். 
அவர்மீது 420 (மோசடி) பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சபீர் கரீமுக்கு உடந்தையாக இருந்த அவருடைய மனைவி உள்பட 5 பேர் கைதுசெய்யப்பட்டனர். இந்த வழக்கை எழும்பூர் குற்றப்பிரிவு போலீஸார் விசாரித்துவந்தநிலையில், சிபிசிஐடி-க்கு மாற்றி, தமிழக காவல்துறை டி.ஜி.பி., ராஜேந்திரன் உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கில் சிபிசிஐடி போலீஸார் சமீபத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில், சபீர் கரீமை பணிநீக்கம் செய்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!