வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (24/08/2018)

கடைசி தொடர்பு:22:30 (24/08/2018)

கணவர் இறந்த துக்கம் தாளாமல் தீக்குளித்த மனைவி - காரைக்குடியில் சோகம்!

கணவர் இறந்த துக்கத்தில் பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். ஆனால், சிலிண்டர் வெடித்து அந்தப் பெண் இறந்ததாக காட்டுத்தீ போல செய்தி பரவியது. போலீஸ் மற்றும் தீயணைப்புப் படையினரும் பதறிப்போய் விரைந்துவந்தனர்.

தற்கொலை

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி செஞ்சை ஒளவையார் தெருவில், வீட்டில் வசித்துவந்தவர் லட்சுமி . இவரது மகள் செல்வி. அவருக்குத் திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளன. இவரது கணவர் ஆறுமுகத்துடன் தேவகோட்டையில் வசித்துவந்தபோது, கடந்த இரண்டு மாதத்துக்கு முன்பு உடல்நலக்குறைவால் ஆறுமுகம் இறந்துவிட்டர். அதனால், செல்வி காரைக்குடியில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு வந்து, கடந்த 2 மாதங்களாக கணவர் இறந்த கவலையுடன் இருந்துவந்திருக்கிறார். இன்று, அவரின் தாய் வேலைக்கும் குழந்தைகள் பள்ளிக்கும் சென்ற சமயம் பார்த்து, உடலில் மண்ணெண்ணெய் உற்றி தீ வைத்துக்கொண்டார். கூரை வீடு என்பதால், தீ வேகமாகப் பரவி வீடு முழுவதும் எரிந்தது. உடனே, அருகில் உள்ளவர்கள் தீயணைப்புத் துறைக்குத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து,  விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீ மேலும் பரவாமல் தடுத்ததுடன் தீயை அணைத்தனர் . சிலிண்டர் வெடித்து தீ பிடித்ததாக நினைத்த காவல்துறையினர், சம்பவ இடத்தில் விசாரித்ததில் செல்வி தீ வைத்து தற்கொலை செய்துகொண்டது தெரிய வந்துள்ளது. செல்விவியின் உடலைக் கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்கு அனுப்பிவைத்து, விசாரணை செய்துவருகின்றனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க