நேரில் சென்று விஜயகாந்துக்கு வாழ்த்து தெரிவித்த திருமாவளவன்!

தே.மு.தி.க பொதுச் செயலாளர் விஜயகாந்தின் பிறந்தநாளையொட்டி அவருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். 

திருமாவளவன்

உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக அமெரிக்க சென்று சிகிச்சை மேற்கொண்ட தே.மு.தி.க பொதுச்செயலாளர் விஜயகாந்த் சமீபத்தில் நாடு திரும்பினார். இதற்கிடையே, விஜயகாந்த் இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதையடுத்து அவருக்குத் தொண்டர்கள் வாழ்த்துகள் தெரிவித்த வண்ணம் உள்ளனர். ட்விட்டர் உள்ளிட்ட சமூகவலைதளங்களிலும், அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. இதேபோல் திரைப்பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க அலுவலகத்துக்குச் சென்றவர் அங்கு விஜயகாந்தை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். இதேபோல் தொண்டர்கள் பலரும் அவருக்கு நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!