`கருணாநிதி இருக்கும்போதே பதவிக்கு ஆசைப்படாதவன்; ஆனால்...!’ - அதிரடி காட்டும் அழகிரி

``தி.மு.கவின் செயல் தலைவராக ஸ்டாலின் ஆன பின்பு எத்தனை தேர்தலில் தி.மு.க வெற்றி பெற்றுள்ளது" என்று கேள்வி எழுப்பியுள்ளார் மு.க.அழகிரி.

அழகிரி

வருகிற 5-ம் தேதி சென்னையில் கலைஞருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மாபெரும் பேரணி நடத்த திட்டமிட்டுள்ள மு.க.அழகிரி, அதற்கு ஆதரவாளர்களை  திரட்டும் நோக்கில் ஆலோசனைக் கூட்டத்தை மதுரையில் நேற்று முதல் நடத்தி வருகிறார். அதில் பல மாவட்டங்களைச் சேர்ந்த அவருடைய ஆதரவாளர்கள் கலந்துகொண்டு வருகிறார்கள். இன்று தொடர்ந்து நடந்த கூட்டத்தில் துரை தயாநிதியும் கலந்துகொண்டார். எந்தெந்த மாவட்டத்திலிருந்து எவ்வளவு பேர் வரவேண்டும் என்ற டார்கெட் போட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆலோசனைக் கூட்டத்துக்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி, ``தலைவர் கலைஞர் இருந்தபோதே பதவி மீது ஆசைப்படாதவன் நான். கலைஞர் இருந்த தாய்க்கழகமான தி.மு.க-வில் நான் இருக்க வேண்டும் என்று நினைப்பது தவறில்லையே. தி.மு.க செயல் தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின்பு எத்தனை தேர்தலில் தி.மு.க வெற்றி பெற்றது. செப்டம்பர் 5-ல் நடக்கும் பேரணிக்குப்பின் மக்கள் என்னை ஏற்றுக்கொள்வது என்பது தெரியும்" என்றார். பேரணி நடக்கும் நாள் வரை, தினமும் அதிரடியாகக் கருத்துகளை அழகிரி வெளிப்படுத்தி வருவார் என்று கூறப்படுகிறது. இதற்கு தி.மு.க தரப்பிலிருந்து இதுவரை எதிர்வினை யாரும் ஆற்றவில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!