ஹெல்மெட் அணியாவிட்டால் கடும் நடவடிக்கை - காவல்துறை எச்சரிக்கை

தலைக் கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுபவர் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர் ஆகிய இருவர் மீது மோட்டார் வாகனச் சட்டத்தின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை பெருநகர காவல்துறை எச்சரித்துள்ளது. 

வாகன ஓட்டிகள்

இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணிவதைக் கட்டாயப்படுத்தவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசை வலியுறுத்தியது. இந்தநிலையில் சென்னை காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், 'மோட்டார் வாகனச் சட்டம் 1988, பிரிவு 129வின் படி இருசக்கர வாகனத்தை ஓட்டுபவர் மற்றும் பின்னால் அமர்ந்து பயணிப்பவர் இருவரும் ஹெல்மெட் அணியவேண்டும் என்பது கட்டாயம்.

இதுதொடர்பாக சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை பொதுமக்களிடயை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டுவருகிறது. மேலும், தலைக்கவசம் அணியாமல் செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. எனினும் இருசக்கர வாகனத்தில் பின்னால் செல்பவர்கள் தலைக்கவசம் அணியாமல் செல்வது காணப்படுகிறது. எனவே, வாகன ஓட்டிகளின் நலன் கருதியும், சாலை விபத்துகளில் தலைக்கவசம் அணியாததால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்கவும், அனைத்து இரு சக்கர வாகன ஓட்டிகளும், பின்னால் அமர்ந்து செல்பவர்களும் கட்டாயம் ஹெல்மெட் அணியவேண்டும் என்று தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

மேலும், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுபவர் மற்றும் பின்னால் அமர்ந்து பயணிப்பவர்கள் ஆகிய இருவர் மீதும் மோட்டார் வாகனச் சட்டத்தின்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போக்குவரத்து காவல்துறை சார்பாக தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!