வினை விதைத்தவன் வினை அறுப்பான் - திமுக பற்றி அமைச்சர் கடம்பூர் ராஜு விமர்சனம்

ஜெயலலிதா மறைந்தவுடன் அதிமுக பிளவு ஏற்பட்டு, ஆட்சி கலைந்து

ஜெயலலிதா மறைந்தவுடன் அ.தி.மு.க பிளவு ஏற்பட்டு, ஆட்சி கலைந்து, தாங்கள் ஆட்சிக்கு வந்துவிடலாம் என நினைத்த தி.மு.கவில் தற்போது வாரிசு சண்டை நடைபெற்று வருகிறது. இதைத்தான் வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பார்கள். அ.தி.மு.கவில் சிறு சிறு கருத்து வேறுபாடு நிலவினாலும், ஒற்றுமையாக வழுவான இயக்கமாக செயல்பட்டு வருகிறது.'' என்றார் அமைச்சர் கடம்பூர் ராஜு.

வினை விதைத்தவன்

சாத்தூர் அருகே செவல்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய கடம்பூர் ராஜூ, ''டி.டி.வி.தினகரனுக்கு அ.தி.மு.க நிர்வாகத்தைப் பற்றி பேச எந்தவித தார்மீக உரிமையும் இல்லை. முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவேந்தல் நிகழ்சியில் கலந்து கொள்வது பற்றி  அ.தி.மு.கவின் கழக ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் மூத்த அமைச்சர்களோடு கலந்து ஆலோசனை செய்து முடிவெடுப்பார்கள். மூத்தத் தலைவரின் இரங்கல் கூட்டத்திற்கு அனைத்து கட்சியினருக்கும் அழைப்பு விடுப்பதும், கலந்து கொள்வதும் இயல்பான ஒன்றுதான், இதில் அரசியல் இல்லை. தி.மு.கவில் தலைவர் பதவிக்கு ஸ்டாலினும், அழகிரியும் வாரிசு சண்டையிட்டு வருகிறார்கள். அ.தி.மு.கவின் கோட்டையாக திகழும் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் மீண்டும் அ.தி.மு.கதான் வெற்றி பெறும். திருவாரூர் தொகுதியிலும் வெற்றி பெறுவோம்' என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!