`டாஸ்மாக் லாபத்தில் தான் ஆசிரியர்களுக்குச் சம்பளம்; பள்ளிகளுக்கு புதிய கட்டடம்' - கே.சி.வீரமணி சர்ச்சை பேச்சு!

டாஸ்மாக் கடைகள் வருமானத்தில் தான் ஆசிரியர்களுக்குச் சம்பளம் கொடுக்கப்படுகிறது அமைச்சர் கே.சி.வீரமணி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

கே சி வீரமணி

வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த சின்னமூக்கனூரில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தியது தமிழக அரசு. தரம் உயர்த்தப்பட்டதின் பின் அப்பள்ளியின் திறப்பு விழா நேற்று நடந்தது. திறப்பு விழா கொண்டாட்டத்தில் தமிழக வணிகவரித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அவர் பேசி கொண்டு இருக்கும்போது மது அருந்தி விட்டு அ.தி.மு.க தொண்டர் ஒருவர் அமைச்சரின் பேச்சுக்கு பாசிடிவ் கமெண்ட் அடித்துக்கொண்டிருந்தார். இது அங்குள்ளவர்களிடையே சிரிப்பை வரவைத்தது. அமைச்சருக்கும் சிரிப்பை வரவைத்தது. பாதியில் பேச்சைத் நிறுத்திய அமைச்சர் போலீஸாரை அழைத்து மது அருந்தியவரை அப்புறப்படுத்தச் சொன்னார். 

அதன் பிறகு பேச்சைத் தொடர்ந்த அமைச்சர், "டாஸ்மாக் கடை வருமானம் அனைத்தும் என் துறைக்குத்தான் வருகிறது. டாஸ்மாக் விற்பனை லாபத்தால் தான்  ஆசிரியர்களுக்குச் சம்பளம் கொடுத்துக் கொண்டு இருக்கிறோம். அதிலிருந்துதான் புதிய பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அதனால் அவரை எதுவும் செய்ய முடியாது. அவரை நான் குடிக்க வேண்டாம் என்று சொன்னால் வருமானம் குறைந்துவிடும்; வளர்ச்சி பணிகள் எல்லாம் கெட்டுப்போய்விடும்" என்று சிரித்துக்கொண்டே பேசிவிட்டார். அமைச்சரே இதுபோன்று பேசலாமா? என்று ஆசிரியர்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் சலசலப்பை ஏற்படுத்தியது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!