”திருநாவுக்கரசர் மீண்டும் பா.ஜ.க-வில் சேர்ந்துவிடலாம்” - ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பேச்சு! | Tamilnadu Congress president can join bjp if possible, says evks Elangovan

வெளியிடப்பட்ட நேரம்: 09:10 (27/08/2018)

கடைசி தொடர்பு:09:10 (27/08/2018)

”திருநாவுக்கரசர் மீண்டும் பா.ஜ.க-வில் சேர்ந்துவிடலாம்” - ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பேச்சு!

'தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர், மீண்டும் பா.ஜ.க - வில் சேர்ந்துவிடலாம்' என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்தார். 
இளங்கோவன்
திருச்சியை அடுத்த சமயபுரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் பிரமுகர் இல்ல திருமண விழாவில் கலந்துகொண்ட தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள்  தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.
 
அப்போது அவர், "தி.மு.க-காங்கிரஸ் இடையேயான உறவு சுமுகமாக உள்ளது. தற்போதைய தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர், பா.ஜ.க-வையும் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உள்ளிட்டோரையும் புகழ்வதைப்பார்த்தால், அவர் மீண்டும் பா.ஜ. கட்சிக்கே சென்றுவிடலாம். 
 
தமிழகத்தில் உள்ள பாலங்கள், அணைகள் உடைவதைப்  பார்க்கும்போது, இந்த நேரத்தில் பாலங்கள் உடைந்தால்தான் புதிய பாலங்கள் கட்ட முடியும், அப்போதுதான்  கமிஷன் பார்க்க முடியும் என்று  தமிழக அமைச்சர்கள் நினைத்துச் செயல்படுவதுபோல உள்ளது.
 
காமராஜர் ஆட்சிக் காலத்தில் ஆறுகள் குளங்கள் வாய்க்கால்கள் தூர் வாருவதை அந்தந்தப் பகுதி மக்கள் செயல்படுத்தினார்கள். ஆனால் அந்த முறை மாற்றப்பட்டு, நாளடைவில் அரசாங்கமே செய்வதாகக் கூறி நிதி ஒதுக்கி, அந்த நிதியை எடுத்துக்கொண்டார்கள். 
 
அந்தப் பணத்தில் ஒரு துளி கூட உருப்படியாக மராமத்துப் பணிக்குச் செலவிடவில்லை. இதனால்தான், காவிரியில் அளவுக்கதிகமான தண்ணீர் கரைபுரண்டு ஓடியபோதும் இதுவரை கடைமடைக்குச் செல்லவில்லை. காவிரியில் பாய்ந்தோடும் தண்ணீரும் தாமிரபரணி ஆற்றில் பாய்ந்தோடும் தண்ணீரும் வீணாகக் கடலில் கலக்கிறது. இவ்வளவு தண்ணீர் ஆறுகளில் ஓடியும்கூட தமிழகத்தின் பல மாவட்டங்கள் வறட்சியிலிருந்து மீளவில்லை, இது தொடர்பாக உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
 
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் மீண்டும் பா.ஜ.க-வில் சேர்ந்துவிடலாம் என முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறியுள்ள கருத்து காங்கிரஸில் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க