வெளியிடப்பட்ட நேரம்: 14:43 (27/08/2018)

கடைசி தொடர்பு:10:40 (29/08/2018)

`தவறுதான்... அதற்கு நான் அடிமையாகிவிட்டேன்' - விடுதி வார்டனின் 5 பக்க அதிர்ச்சி வாக்குமூலம்! 

திருமுல்லைவாயல் விடுதி வழக்கில் கைதானவர்கள்

சென்னை திருமுல்லைவாயல் விடுதியில், மாணவ மாணவியருக்குப் பாலியல் தொல்லைகொடுத்த விடுதி வார்டன் பாபு சாமுவேல், 5 பக்கம் அதிர்ச்சி வாக்குமூலம் கொடுத்துள்ளார். 

சென்னை அம்பத்தூரை அடுத்த திருமுல்லைவாயலில் செயல்பட்ட விடுதியில், மாணவ- மாணவியர் தங்கி படித்துவந்தனர்.  இவர்களுக்கு பாலியல் தொல்லைகொடுத்ததாகப் புகார் எழுந்தது. அதன்பேரில், ஆவடி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ஷோபா ராணி, வழக்குப்பதிவு செய்து, விடுதியை நடத்திய ஜேக்கப், விமலா, வேலை பார்த்துவந்த முத்து, பாஸ்கர், வார்டன் பாபு சாமுவேல் ஆகிய 5 பேரைக் கைதுசெய்துள்ளனர்.  வார்டன் பாபு சாமுவேலிடம் போலீஸார் விசாரித்தபோது, அவர் கொடுத்த தகவல்களை 5 பக்கம் வாக்குமூலமாக போலீஸார் பதிவு செய்துள்ளனர். அதில் உள்ள சில தகவல்கள். 

 'சென்னை கோட்டூர்புரம்தான் என்னுடைய சொந்த ஊர். எனக்கு இரண்டு சகோதரிகள். சின்ன வயதிலேயே படிப்பு ஏறவில்லை. இதனால், வேலைதேடி அலைந்தேன். பல இடங்களில் வேலைபார்த்தேன். எனக்கு, வீட்டில் திருமணம் செய்துவைத்தனர். என்னுடைய நடவடிக்கை பிடிக்காமல் மனைவி பிரிந்து சென்றுவிட்டார். இதனால் தனிமரமாக வாழ்ந்தேன். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்புதான் விமலா ஜேக்கப் நடத்திய விடுதியில் வேலை கேட்டுச் சென்றேன். அவரும் எனக்கு வேலை கொடுத்தார். விடுதியிலேயே தங்கியிருந்தேன். குறைந்த சம்பளம் என்றாலும் மூன்று நேரம் உணவு என்பதால், சந்தோஷமாக வேலைபார்த்தேன். சிறு வயது முதலே எனக்கு தவறான பழக்கம் (ஓரினச்சேர்க்கை) இருந்துவந்தது. அந்தப் பழக்கத்தை மட்டும் என்னால் விடமுடியவில்லை. விடுதியில் மாணவ மாணவிகளைக் கண்காணிக்கும் பணியில் இருந்ததால், அவர்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்தது. 

 வாக்குமூலம் கொடுத்த வார்டன் பாபு சாமுவேல்

முதலில், மாணவர்களுடன்தான் நெருங்கிப் பழகினேன். நான் சொல்வதையெல்லாம் பயத்தினால் மாணவர்கள் கேட்டனர். என்னை எதிர்த்து யாரும் பேசமுடியாது. நிர்வாகத்திடம் என்மீது புகார் கூறினாலும் அதை யாரும் நம்ப மாட்டார்கள். அந்த அளவுக்கு நிர்வாகம் என்னை முழுமையாக நம்பியது. மேலும், நான்தான் சிலரை அங்கு வேலையில் சேர்த்துவிட்டேன். என்னுடைய மிரட்டலுக்குப் பயந்தே சில மாணவர்கள், நான் சொல்வதையெல்லாம் கேட்டனர். விடுதி, 4 ஏக்கரில் அமைந்துள்ளது. தனித்தனியாகத்தான் மாணவ மாணவிகளின் விடுதிக் கட்டடங்கள் இருந்தன. மற்ற இடம், ஆள் அரவமற்ற புதர்களாகவே காணப்பட்டன. அங்கு யாரும் வர மாட்டார்கள். அங்குதான் எனக்குப் பிடித்த மாணவரை அழைத்துச் செல்வேன். அங்கு இருவரும் ஜாலியாக இருப்போம். என்னுடைய செல்போனிலும், விடுதியில் உள்ள டி.வி-யில் ஆபாசப் படங்களைப் பார்ப்பேன். மாணவர்களிடம் பழகும்போதே அவர்களின் சுயரூபத்தைத் தெரிந்துகொள்வேன். அதன்படி, அத்தகைய மாணவரைத் தனியாக அழைத்து டி.வி-யில் ஆபாசப் படங்களைப் பார்ப்போம். விருப்பப்பட்டும் மிரட்டலுக்குப் பயந்தும் அங்கு நடந்ததை வெளியில் யாரும் சொல்லவில்லை. 

 மாணவர்களைத் தொடர்ந்து, மாணவிகள் மீதும் எனக்கு ஆசை ஏற்பட்டது. மாணவிகள் விவகாரத்தில் கவனமாக இருந்தேன். பத்து வயதுக்குக் குறைவான மாணவிகள்தான் என்னுடைய இலக்கு. அவர்களும் எனக்குப் பயந்து எதையும் வெளியில் சொல்லவில்லை. இந்தச் சமயத்தில்தான் என்னைப் போல விடுதியில் தங்கியிருந்த இன்னொருவரும் மாணவிகளிடம் நெருங்கிப் பழகினார். அந்தத் தகவல் எனக்கு கிடைத்ததும், முதலில் அவரைக் கண்டித்தேன். அதன்பிறகு, இருவரும் கூட்டாளிகளாகிவிட்டோம். இந்தச் சமயத்தில் விடுதியில் 14 ஆண்டுகள் தங்கியிருந்த ஒருவருக்கும் அங்கு வேலைபார்க்கும் ஒரு பெண்ணுக்கும் பழக்கம் இருந்தது. இந்தத் தகவல் கிடைத்ததும் அந்தப் பெண்ணை மிரட்டினேன். அதன்பிறகு அவருக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டது.  மாணவி ஒருவரிடம், நான் தனியாக பேசிக்கொண்டிருந்ததை அந்தப் பெண் பார்த்துவிட்டார். அப்போது அவர், மாணவிகளிடம் தவறாக நடக்காதீர்கள், சிக்கல் ஏற்படும் என்று எச்சரித்தார். ஆனால், நான் கேட்கவில்லை. ஏனெனில், நான் செய்வது தவறு என்று தெரிந்தாலும் அதற்கு அடிமையாக இருந்ததால் நான் அதிலிருந்து விடுபடவில்லை. அந்தப் பழக்கத்தால்தான் என்னுடைய வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிட்டது. 

 திருமுல்லைவாயல் விடுதி

16 வயதுக்கு மேல் மாணவர்களை அங்கு அனுமதிப்பதில்லை. இதனால், என்னைப் பற்றி தெரிந்த மாணவர்களிடம், நடந்த சம்பவத்தை வீட்டிலும் வெளியிலும் சொன்னால் நீதான் மாட்டிக்கொள்வாய், அதன்பிறகு ஜாலியாக இருக்க முடியாது. என்னைப் பார்க்க நீ எப்போது வேண்டும் என்றாலும் விடுதிக்கு வரலாம் என்று சொல்லியிருந்தேன். இதனால், அவர்களும் எதையும் வெளியில் சொல்லவில்லை. சென்னையில் உள்ள அந்த மாணவன்தான் எனக்கு ஸ்பெஷல். அவனுடன் நான் எப்போதும் தொடர்பில் இருந்தேன். அவனை வைத்துதான் என்னை போலீஸார் பிடித்துவிட்டனர்' என்று கூறியுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். 

 மூன்று நாள்கள் தூங்காத போலீஸார் 

பாபு சாமுவேலின் செயலால் பாதிக்கப்பட்ட மாணவர் அரசுப் பள்ளியில் படிக்கிறார். அவருக்கு ஏற்பட்ட உடல் நலக்குறைவால், பாபு சாமுவேலின் மறுபக்கங்கள் வெளியில் தெரியவந்துள்ளது. இதனால் பள்ளியின் தலைமை ஆசிரியர், பாபு சாமுவேலை எச்சரித்துள்ளார். இதனால்தான் அவர் விடுதியிலிருந்து வெளியேறி தலைமறைவாகியுள்ளார். மாணவ -மாணவியருக்கு பாலியல் தொல்லைகொடுத்த விவகாரத்தில் பாபு சாமுவேல் மற்றும் அவரின் கூட்டாளிகள், அங்கு வேலைபார்த்த பெண்கள் என ஒரு கூட்டத்துக்குத் தொடர்பு இருப்பதாக போலீஸார் சந்தேகிக்கின்றனர்.  அவர்கள்மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். திருமுல்லைவாயல் விடுதியில் நடந்த பாலியல் தொல்லை தொடர்பாக, ஆவடி அனைத்து மகளிர் போலீஸார் மூன்று நாள்கள் தூங்காமல் துரிமாகச் செயல்பட்டுள்ளனர். இதனால்தான், முக்கிய குற்றவாளிகள்மீது உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளனர். இதற்கிடையில், பாபு சாமுவேலின் செல்போனை போலீஸார் ஆய்வுசெய்துவருகின்றனர். அதில், பல வீடியோக்கள், போட்டோக்கள் அழிக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.