வெளியிடப்பட்ட நேரம்: 16:09 (27/08/2018)

கடைசி தொடர்பு:15:21 (28/08/2018)

`எங்களைக் கட்சியில் சேர்க்கவில்லை என்றால்...’ எச்சரிக்கும் அழகிரி

``என்னைக் கட்சியில் சேர்க்கவில்லை என்றால் தி.மு.க பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும்'' என முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி எச்சரிக்கை விடுத்தார்.

அழகிரி

முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகஸ்ட் 7-ம் தேதி காலமானார். அதைத் தொடர்ந்து தி.மு.க-வின் செயல்பாடு எப்படி இருக்கும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில் ஆகஸ்ட் 13-ம் தேதி மு.க.அழகிரி, குடும்பத்துடன் கருணாநிதி சமாதிக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார். பின்னர், `தி.மு.க-வின் உண்மையான விசுவாசிகள் என்னுடன்தான் இருக்கிறார்கள்’ என்று கூறி ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். பலவருடமாக அமைதியாகச் செயல்பட்ட அழகிரி தற்போது தி.மு.க-வை தொடர்ந்து கடுமையாக விமர்சித்துவருகிறார்.  

நான்காவது நாளாக இன்று அழகிரி தனது வீட்டில் தொண்டர்களைச் சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில் "கருணாநிதி உயிரோடு இருந்ததால் 8 வருடங்களாக நான் எதுவும் பேசவில்லை. தற்போது, அவர் இல்லாததால் நாங்கள் கட்சியைக் காப்பற்ற களத்தில் இறங்கியுள்ளோம். எங்களைக் கட்சியில் சேர்க்கவில்லை என்றால் தி.மு.க பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும். செப்டம்பர் 5-ம் தேதி பேரணிக்கு அனைத்து தொண்டர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளோம்” என்று தெரிவித்தார்.