அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் நாகூர் மீரான் காலமானார்!

நெல்லை மாவட்டம், கடையநல்லூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் அ.தி.மு.க முன்னாள் அமைச்சருமான நாகூர் மீரான் காலமானார். 

நாகூர் மீரான்

திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள வடகரையைச் சேர்ந்தவர், நாகூர் மீரான். இவர் 1991-ம் ஆண்டு அ.தி.மு.க சார்பில் சட்டமன்றத் தேர்தலில் கடையநல்லூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இதையடுத்து, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் 1992 முதல் 1996 வரை ஊரக மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சராகப் பதவி வகித்தவர். அதுமட்டுமின்றி, அ.தி.மு.க-வின் மாநில சிறுபான்மைப் பிரிவு இணைச் செயலாளராகப் பணியாற்றியவர். 54 வயதான இவர், கடந்த சில நாள்களாகவே சிறுநீரகக் கோளாறு காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவந்த நாகூர் மீரான், சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார். அவருக்கு நூர்ஜமீலா என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். இன்று நண்பகல் 12 மணி அளவில், நெல்லை மாவட்டம் வடகரையில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!