வெளியிடப்பட்ட நேரம்: 15:20 (28/08/2018)

கடைசி தொடர்பு:15:20 (28/08/2018)

பேராசிரியை நிர்மலா தேவிக்கு செப்-10 வரை  நீதிமன்றக் காவல் நீட்டிப்பு...

கல்லூரி மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கைதுசெய்யப்பட்டு

 கல்லூரி மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறையில் இருந்துவரும் பேராசிரியை நிர்மலாதேவி, முருகன்,கருப்பசாமி ஆகியோருக்கு,  வரும் செப்டம்பர் 10-ம் தேதி வரை  நீதிமன்றக் காவலை நீட்டித்து இன்று உத்தரவிடப்பட்டது. 

பேராசிரியை


அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி மாணவிகளைத் தவறாக வழிநடத்த முயன்றதாக எழுந்த புகாரில், கடந்த ஏப்ரல் 16-ம் தேதி கைது செய்யப்பட்டார், பேராசிரியை நிர்மலா தேவி. அவருடன், உதவிப் பேராசிரியர் முருகன், பிஹெச்.டி ஸ்காலர் கருப்பசாமி ஆகியோரும் கைதுசெய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர். சி.பி.சி.ஐ.டி விசாரித்துவரும் இவ்வழக்கில், இடைக்கால குற்றப்பத்திரிக்கை தாக்கல்செய்யப்பட்டுள்ளது. பல முறை மனுத்தாக்கல் செய்தும் விருதுநகர் நீதிமன்றம்  ஜாமீன் வழங்கவில்லை. இந்த நிலையில், இவர்கள் உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல்செய்துள்ள ஜாமீன் மனு நிலுவையில் உள்ளது. இன்றுடன்  நிர்மலாதேவி,முருகன்,கருப்பசாமிக்கு  நீதிமன்றக் காவல் முடிவடைந்ததால், இன்று மூவரும் விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வரும் செப்டம்பர் 10-ம் தேதி வரை அவர்களுக்கு நீதிமன்றக் காவலை நீட்டித்து, நீதித்துறை நடுவர் திலகேஸ்வரி  உத்தரவிட்டார்.  மீண்டும் அவர்கள், மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர் 

நீங்க எப்படி பீல் பண்றீங்க