``ஸ்டாலின் தலைமை தி.மு.க-வைப் பலப்படுத்தும்” புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

``ஸ்டாலின் தலைமை தி.மு.க-வைப் பலப்படுத்தும்” என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

நாராயணசாமி

தி.மு.க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஸ்டாலினுக்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர், ``தி.மு.க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவிக்கிறேன். ஸ்டாலினின் தலைமை தி.மு.க-வை மேலும் பலப்படுத்துவதோடு, தமிழ்நாட்டின் புதிய வளர்ச்சிக்கும் வழி வகுக்கும்” என்றும் தெரிவித்துள்ளார்.

 மு.க.ஸ்டாலின்

அதேபோல் புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலத் தலைவர் நமச்சிவாயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ``கலைஞர், திராவிட முன்னேற்றக் கழகத்தை எப்படி கட்டுக்கோப்பாய் வழிநடத்திச் சென்றாரோ அவரைப் போன்றே கழகத்தை செவ்வனே வழிநடத்தும் ஒட்டுமொத்த ஆற்றலையும் ஒருங்கே பெற்ற சிறந்த தலைவர் தளபதி ஸ்டாலின். கொள்கை சார்ந்த அரசியலில் வெற்றி மகுடம் சூடிட புதுச்சேரி மாநில காங்கிரஸ் கமிட்டி சார்பில் வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!