வெளியிடப்பட்ட நேரம்: 20:20 (28/08/2018)

கடைசி தொடர்பு:20:20 (28/08/2018)

மதுரையில் ஃபண்டமென்டல் அனாலிசிஸ் இரண்டு நாள் பங்குச் சந்தை பயிற்சி வகுப்பு!

எப்படி முதலீடு செய்வது என்கிற கேள்விக்கு விடையாக உங்களுக்காகவே, நாணயம் விகடன், பங்குச் சந்தை ஃபண்டமென்டல் அனாலிசிஸ் பயிற்சி வகுப்பு நடத்தி வருகிறது. கோவை, சென்னை, மதுரை, சேலம், திருச்சி போன்ற நகரங்களில் நடத்திவிட்டு தற்போது வாசகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் மதுரையில் நடத்தவிருக்கிறது.

உலகின் வளமான பங்குச் சந்தைகள் பட்டியலில் இந்தியாவும் இருக்கிறது என்பதை நாம் உணர்ந்துவிட்டோம். இப்படிப்பட்ட பொன்னான வாய்ப்பைப் பயன்படுத்தி நம் நாட்டோடு நாமும் வளர என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு சரியாகப் பங்குச் சந்தையில் முதலீடு செய்ய வேண்டும் என்பது வரை நாணயம் விகடன் வாசகர்களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் தெரிந்திருக்கிறது என்பதில் மகிழ்ச்சி.

பங்குச் சந்தை ஃபண்டமென்டல் அனாலிசிஸ்

ஆனால், எப்படி முதலீடு செய்வது என்கிற கேள்விக்கு விடையாக உங்களுக்காகவே, நாணயம் விகடன், பங்குச் சந்தை ஃபண்டமென்டல் அனாலிசிஸ் பயிற்சி வகுப்பு நடத்தி வருகிறது. கோவை, சென்னை, மதுரை, சேலம், திருச்சி போன்ற நகரங்களில் நடத்திவிட்டு தற்போது வாசகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் மதுரையில் நடத்தவிருக்கிறது.

நாணயம் விகடன் நடத்தும் இந்த இரண்டு நாள் கட்டணப் பயிற்சி வகுப்பு 2018 செப்டம்பர் 15 மற்றும் 16 (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை) ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்தப் பயிற்சி வகுப்புக்கான கட்டணம் ரூ.6,000 மட்டுமே.

இந்தியாவின் வளர்ச்சியை, இன்னும் சரியாகச் சொல்லப்போனால் இந்திய பங்குச் சந்தைகளின் வளர்ச்சியை தன் வளர்ச்சியாக மாற்றிக்கொள்ளும் ஆர்வம் உள்ள முதலீட்டாளர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

ஃபண்டமென்டல்
பயிற்சியாளர் :
தி.ரா.அருள்ராஜன்

NSE and NISM Empanelled Trainer,
முதன்மை செயல் அதிகாரி,
எக்ட்ரா - பங்குச் சந்தைப் பயிற்சி மையம்

இந்த இரண்டு நாள் கட்டணப் பயிற்சி வகுப்பில் கற்றுத்தரப்படும் பாடத்திட்டம்...

    1. பங்குச்சந்தையில் முதலீட்டாளராக வெற்றி பெறுவது எப்படி?

    2. ஒரு பங்கின் விலை ஏன் ஏறுகிறது அல்லது இறங்குகிறது?

    3. வலிமையான பங்குகளைத் தேர்வு செய்வது எப்படி?

    4. ஒரு போர்ட்ஃபோலியோவை எப்படி உருவாக்குவது?

    5. இ.பி.எஸ், பிஇ ரேஷியோ வைத்து எப்படி நிறுவனத்தை தேர்வு செய்வது?

    6. ஒரு நிறுவனத்தின் லாப நஷ்டக் கணக்கை எப்படிப் படிப்பது?

    7. பேலஸ்ன்ஸ் ஷீட்டில் உள்ள தகவல்கள் என்ன, அதை எப்படிப் படிப்பது?

    8. லிக்விடிட்டி ரேஷியோ, ஆக்டிவிட்டி ரேஷியோ, பிராஃபிட் ரேஷியோ மற்றும் லிவரேஜ் ரேஷியோவை வைத்து எப்படி முடிவெடுப்பது?

    9. டாப் டவுன் அப்ரோச் மற்றும் பாட்டம் அப் அப்ரோச் என்றால் என்ன?

    10. மேக்ரோ காரணிகள் எப்படி சந்தையை வழிநடத்துகிறது?

இங்கு கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து, பணத்தைச் செலுத்தி பதிவு செய்துகொள்ளவும், பயிற்சி வகுப்பு நடக்கும் இடம், நேரம் ஆகிய விவரங்கள் மின்னஞ்சல் மற்றும் எஸ்.எம்.எஸ் மூலம் பிறகு தெரிவிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு : +91 9940415222