`உறவுக்குக் கைகொடுப்பதில் அவருக்கு நிகர் யாரும் கிடையாது' - வாஜ்பாய் குறித்து நெகிழ்ந்த தலைவர்கள்

இந்தியாவின் மிகப்பெரிய இருபெரும் தலைவர்களான வாஜ்பாய், கருணாநிதியை இழந்துவிட்டோம் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

பிரகாஷ் ஜவடேகர்

சென்னை எழும்பூரில் பா.ஜ.க சார்பில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு புகழஞ்சலி கூட்டம் நடத்தப்பட்டது. இதில், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை, அமைச்சர் ஜெயக்குமார், கனிமொழி, திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்று வாஜ்பாய் குறித்துப் பேசினர். அப்போது பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ``இந்த மாதத்தில் இந்தியாவின் மிகப்பெரிய இருபெரும் தலைவர்களான வாஜ்பாய், கருணாநிதியை இழந்துவிட்டோம். இரு தலைவர்களின் இழப்புக்கு எனது மரியாதையைச் செலுத்துகிறேன். வாஜ்பாய் ஒரு சிறந்த கவிஞர், கலைஞர் என்பதைத் தாண்டி முக்கியமாக அவர் ஒரு சிறந்த மனிதர், நாகரிகமான அரசியல்வாதி. 

அதனாலேயே அனைவராலும் அவர் விரும்பப்படுகிறார். நாட்டில் உள்ள பல்வேறு மொழிகளுக்கும் வாஜ்பாய் முக்கியத்துவம் அளித்தவர். நான் அவரை ஒரு ஒழுக்கமான தலைவராகவே பார்த்தேன்" என்றார். இதேபோல் பேசிய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ``மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது தற்பெருமை கொள்ளாமல் பிறரைப் பாராட்டியவர் வாஜ்பாய். 1998-ல் அணுகுண்டு சோதனை நடத்தி உலகநாடுகளை வியக்க வைத்தார் அவர். அப்துல்கலாமை குடியரசுத் தலைவராக்கி அழகு பார்த்தார். உறவுக்குக் கைகொடுப்பதில் வாஜ்பாய்க்கு நிகர் யாரும் கிடையாது" எனக் கூறினார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!