``69 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து'' - சி.பி.எம் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன்! | CPM state secretary balakrishnan byte

வெளியிடப்பட்ட நேரம்: 03:00 (29/08/2018)

கடைசி தொடர்பு:10:15 (29/08/2018)

``69 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து'' - சி.பி.எம் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன்!

'போராட்டம்மூலம் பெறப்பட்ட 69 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது' என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பாலகிருஷ்ணன்

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 16-வது மாநில மாநாடு வரவேற்புக் குழு கூட்டம், சிவகங்கையில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த சி.பி.எம் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், "தி.மு.க தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வானதற்கு நெஞ்சார்ந்த பாராட்டுக்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். கடந்த  50 ஆண்டுகளில்  இளைஞர் அணித் தலைவர், செயல் தலைவர் என கட்சிப் பணியாற்றியவர். தி.மு.க ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சர், துணை முதல்வர், சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகத் தனி முத்திரை பதித்தவர். தமிழகத்தில், தமிழக அரசு மனித உரிமையை காலில் போட்டு மிதிக்கிறார்கள். கார்ப்பரேட்களுக்கு காவு கொடுக்கிற அரசாக உள்ளது. இந்திய அரசு பாரம்பர்யத்தைக் குழிதோண்டிப் புதைக்கிறார்கள். மொழி உரிமையைப் பறிக்கிறார்கள். போராடிப் பெற்ற 69 சதவிகித இட  ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு வேட்டுவைக்கிறார்கள்.

தாழ்த்தப்பட்டோர் சட்டப் பாதுகாப்பை அச்சமான சூழ்நிலைக்கு மாற்றியிருக்கிறார்கள். மதவெறி ஆட்சியைக் குழிதோண்டிப் புதைக்க வேண்டும். பன்முகத் தன்மையை, மதச் சார்பற்ற கொள்கையை முன்னெடுக்க, பாதுகாக்க ஒன்றுபட்ட எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியைப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னெடுப்பார். அவருக்கும், பொருளாளராகத் தேர்வுபெற்றுள்ள துரைமுருகன் ஆகியோர்களுக்கு, நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். தொழில்வளர்ச்சியிலும், விவசாயத்துக்கான பாசனத்திட்டத்திலும் கடந்த 10 வருடங்களாக சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டம் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

காவேரி, குண்டாறு, வைகையை இணைத்திருந்தால் புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய மாவட்ட விவசாயத்துக்கும், குடிதண்ணீர் நீர்வள ஆதாரத்துக்கும் பயன்பெற்றிருக்கும். இதையெல்லாம் செய்யாத அரசுதான் தமிழக அரசாக உள்ளது. இவற்றுக்கெல்லாம் மாற்றாக பிரத்யேக எதிர்காலத்தைத் திட்டமிட, மாற்று அரசியலை வகுக்கிற மாநாடு, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில மாநாடு சிவகங்கையில் டிசம்பர் 27, 28, 29 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது' என்று அவர் தெரிவித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க