`கால் செய்தால் வீடு தேடி போலீஸ்' - மதுரை காவல் ஆணையரின் புதிய திட்டம்! | Madurai city police commissioner started new scheme

வெளியிடப்பட்ட நேரம்: 07:00 (29/08/2018)

கடைசி தொடர்பு:08:03 (29/08/2018)

`கால் செய்தால் வீடு தேடி போலீஸ்' - மதுரை காவல் ஆணையரின் புதிய திட்டம்!

மதுரை மாநகராட்சியிலுள்ள 100 வார்டுகளில்,  வார்டுக்கு ஒருவர் என்ற கணக்கில் எஸ்.ஐ-களை நியமித்து புதிய நடைமுறையை உருவாக்கியுள்ளார், கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம்.

காவல் ஆணையர்

மதுரை சிட்டிக்குள் 17 காவல் நிலையங்கள் மட்டுமே  இருப்பதால், பொதுமக்களால் காவல்துறையை உடனே அணுக முடியவில்லை. இதனால், மாநகருக்குள் குற்றச்செயல்கள் அதிகரித்துவருகின்றன.  வரும் காலத்தில் குற்றங்களைக் குறைக்கவும், பெண்கள், குழந்தைகள்  பாதுகாப்பாக இருக்கவும், பொது மக்கள்  காவல் துறையை எளிதாக தொடர்புகொள்ள வசதியாக, இந்த புதிய திட்டத்தை இன்று முதல் நடைமுறைக்குக் கொண்டுவந்துள்ளார், காவல் ஆணையர் தேவாசீர்வாதம். வார்டுக்கு ஒரு எஸ்.ஐ என்ற கணக்கில், மாநகராட்சியிலுள்ள 100 வார்டுகளுக்கும் எஸ்.ஐ-களை வார்டு ஆபீசராக  நியமித்து, அவர்களின் மொபைல் எண்களைப் பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் வெளியிட்டுள்ளார்.

பொதுமக்கள் ஏதாவது பிரச்னை எனறால், போலீஸ் ஸ்டேஷனில் காத்துக்கிடக்காமலிருக்கும் வகையில் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. வார்டு ஆபீசர்களான எஸ்.ஐ-க்கு போன் செய்தால் போதும். அவர்கள் ஸ்பாட்டுக்கு வருவார்கள். ஒவ்வொரு எஸ்.ஐ-யுடனும் இரண்டு காவலர்கள் இருப்பார்கள். 'இந்த சிறப்பான திட்டத்துக்கு மக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்' என்று கமிஷனர் கேட்டுக்கொண்டுள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க