வெளியிடப்பட்ட நேரம்: 09:18 (29/08/2018)

கடைசி தொடர்பு:09:52 (29/08/2018)

மருத்துவமனையில் தயாளு அம்மாள் அனுமதி! - தொலைபேசிமூலம் நலம் விசாரித்த அழகிரி

அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தயாளு அம்மாள், சிகிச்சை முடிந்து இன்று மதியம் வீடு திரும்புவார் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தயாளு அம்மாளை பார்க்க ஸ்டாலின் வருகை

தி.மு.க-வின் முன்னாள் தலைவர் கருணாநிதி, கடந்த 7-ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் காலமானார். அவரது மறைவைத் தொடர்ந்து, கட்சியின் தலைவராக மு.க. ஸ்டாலின் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். இந்நிலையில், கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள், நேற்று இரவு உடல்நலக்குறைவால் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

கடந்த சில மாதங்களாகவே, அவர் உடல்நலக்குறைவு காரணமாக ஓய்வில் இருந்துவந்தார். கருணாநிதி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அங்கு வந்து பார்த்துச் சென்றார். இந்த நிலையில், நேற்று இரவு தயாளு அம்மாளுக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலை தயாளு அம்மாளை பார்க்க தி.மு.க தலைவர் ஸ்டாலின் அப்போலோ மருத்துவமனைக்கு வந்துள்ளார். மேலும், மதுரையில் உள்ள மு.க.அழகிரி, தயாளு அம்மாள் உடல்நலம்குறித்து மருத்துவர்களிடம் தொலைபேசிமூலம் கேட்டறிந்தார். 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க