' தவறான தொழில் செய்தால் கொள்ளையடிப்போம்!' - தஞ்சையை மிரட்டும் கும்பல்

க்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில், கடந்த சில நாள்களாக, ஐந்து பேர் கொண்ட கொள்ளைக் கும்பல் ஒன்று விநோதமான முறையில் கொள்ளைச் சம்பவங்களை அரங்கேற்றிவருவது தஞ்சை மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.

தஞ்சாவூர் காசுக்கடைத் தெரு பகுதியில், கடந்த சனிக்கிழமை மாலை ஐந்து பேர் கொண்ட கொள்ளைக் கும்பல் ஒன்று, பயங்கர ஆயுதங்களுடன் வலம்வந்தது. இங்குள்ள வணிக வளாகம் ஒன்றின் மாடியில் லாட்டரிச் சீட்டு விற்பனை செய்யும் நபரின் கழுத்தில் அந்த கொள்ளையர்களில் இருவர் கத்தியை வைத்து மிரட்டிப் பணம் பறித்துள்ளார்கள். அந்த வளாகத்தின் மாடிக்கு வேறு யாரும் செல்ல முடியாதபடி, மற்ற மூன்று கொள்ளையர்களும் ஆயுதங்களுடன் பாதுகாப்புக்கு நின்றுள்ளனர். இதே கும்பல், அடுத்த சில மணிநேரங்களில் வடக்கு வீதியில் உள்ள உரிமம் பெறாத டாஸ்மாக் பாருக்குச் சென்று பணம் பறித்துள்ளது.

நேற்று மதியமும், கீழவாசல் அருகில் உள்ள சாமந்தம் குளம் மற்றும் கரந்தை உள்ளிட்ட பகுதிகளில் வலம்வந்துள்ளது இந்தக் கும்பல். இதுகுறித்து நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர் ஒருவர், " தடைசெய்யப்பட்ட லாட்டரிச் சீட்டுகள், முறைகேடான தொழில் செய்பவர்கள் ஆகியோரைக் குறிவைத்து, இந்தக் கும்பல் கொள்ளையடித்துவருகிறது. திரைப்பட பாணியில் தவறான நபர்களிடம் மட்டுமே கொள்ளையடிப்பதைப் போன்ற ஒரு போலியான தோற்றத்தை ஏற்படுத்த இந்தக் கும்பல் முயல்கிறது. அடுத்தகட்டமாக வீடுகள், வங்கிகள், வணிக நிறுவனங்களிலும் இவர்கள் கை வைக்ககூடும். இந்த கொள்ளைக் கும்பல்குறித்து தஞ்சையில் உள்ள காவல் நிலையங்களுக்குத் தகவல் சென்றிருக்கிறது. ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை" என்றார் ஆதங்கத்துடன்.    

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!