சென்னை புத்தகத் திருவிழாவில் அதிக கவனம் ஈர்த்த புத்தகங்கள்... ஒரு பார்வை! | important books details which are focused in chennai book festival

வெளியிடப்பட்ட நேரம்: 15:30 (29/08/2018)

கடைசி தொடர்பு:15:30 (29/08/2018)

சென்னை புத்தகத் திருவிழாவில் அதிக கவனம் ஈர்த்த புத்தகங்கள்... ஒரு பார்வை!

பல்வேறு புத்தக விற்பனை நிறுவனங்கள், பதிப்பகங்கள் கலந்துகொண்ட இந்தச் சென்னைப் புத்தகத் திருவிழாவில் அதிக அளவில் கவனம் பெற்ற நூல்கள்

சென்னை புத்தகத் திருவிழாவில் அதிக கவனம் ஈர்த்த புத்தகங்கள்... ஒரு பார்வை!

தமிழ்நூல் வெளியீடு மற்றும் விற்பனை மேம்பாட்டுக் குழுமம் சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் ஆகஸ்ட் 17 முதல் 27 வரை சென்னைப் புத்தகத் திருவிழா நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு, இந்தியா முழுவதுமிருந்து பல்வேறு பதிப்பகங்கள் பங்கேற்றன. ஒவ்வொரு நாளும் கலை நிகழ்ச்சிகள், ஆய்வுக் கருத்தரங்கங்கள், கவியரங்கம் எனப் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. கடைசி நாளான  ஆகஸ்டு 27-ம் தேதி அன்று கவிதை, நாவல், சிறுகதை, கட்டுரைத் தொகுப்பு வரலாறு, மொழிபெயர்ப்பு, பெண்ணியம், சிறுவர் இலக்கியம், கல்வி, சுற்றுச்சூழல் என, பத்துப் பிரிவுகளில் 2017-18ம் ஆண்டில் வெளிவந்த சிறந்த 10 நூல்களுக்கு விருது வழங்கப்பட்டது. இந்த விருதை, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் வழங்கினார்.

புத்தகத் திருவிழா

புத்தகத் திருவிழாவின் நிறைவு நாளிலும் புத்தகங்களை வாங்க வாசகர்கள் பெருமளவில் அரங்குக்கு வந்திருந்தனர். அரங்கின் கூட்டத்தில் பெரும்பாலும் பள்ளி மாணவர்களே நிறைந்திருந்தனர். இந்தப் புத்தகத் திருவிழாவை, பள்ளி மாணவர்களின் வாசிப்புப் பழக்கத்தை ஓரளவு நிறைவேற்றியதற்கான அடையாளமாகவே பார்க்க முடிகிறது.

பல்வேறு புத்தக விற்பனை நிறுவனங்கள், பதிப்பகங்கள் கலந்துகொண்ட இந்த விழாவில், அதிக அளவில் கவனம் ஈர்த்த நூல்கள் எவை என, குறிப்பிட்ட சில முக்கியப் பதிப்பகங்களில் கேட்டறிந்தேன். இந்தப் பட்டியல், ஆகஸ்டு 30-ம் தேதி தொடங்கி செப்டம்பர் 10-ம் தேதி வரை மதுரையில் நடைபெறவுள்ள புத்தகக் கண்காட்சிக்கு ஓரளவு பயன்படலாம். 

தடாகம் பதிப்பகம். 

1) தமிழர் பண்பாடும் தத்துவமும் 

                                                       -     நா. வானமாமலை
2) ஃபுக்குஷிமா: ஒரு பேரழிவின் கதை   

                                              -     பிரெஞ்சு - மிக்கேயில் ஃபெரியே, தமிழில்: சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர்.

3) ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம் அயோத்திதாசரின் சொல்லாடல்    

                                                       -    ப. மருத நாயகம்.
4) அறியப்படாத தமிழ்மொழி                                       

                                                       -     முனைவர். கண்ணபிரான் இரவிசங்கர் 


5) மானுட வாசிப்பு தொ.ப-வின் தெறிப்புகள்             

                                                      -    ஏ.சண்முகானந்தம், தயாளன்.


உயிர்மை பதிப்பகம்

1) அவரும் நானும்                                                         

                                          -     துர்கா ஸ்டாலின்
2) சுஜாதா தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் (3 தொகுதி)

3) வேங்கை நங்கூரத்தின் ஜீன் குறிப்புகள்     

                                          -    தமிழ்மகன்

4) திராவிடத்தால் வாழ்ந்தோம்     

                                         -    மனுஷ்ய புத்திரன்


எதிர் வெளியீடு

1) காலம் ஒரு வரலாற்றுச் சுருக்கம்                           

                                         -     ஸ்டீஃபன் ஹாக்கிங், தமிழில்: நலங்கிள்ளி

2)  கடவுள் என்னும் மாயை                                 

                                         -    தருமி

3) தூக்கிலிடுபவரின் குறிப்புகள்                       

                                         -    சசி வாரியார்

4) வெண்ணிற இரவுகள்         

                                         -    ஃபியோதர் தாஸ்தாயெவ்ஸ்கி, தமிழில்: பத்மஜா நாராயணன்

5) ஆதிவாசிகள் இனி நடனம் ஆடமாட்டார்கள்   

                                         -    ஹஸ்தா சௌவேந்திர சேகர், தமிழில்: லியோ ஜோசப்


பேசாமொழிப் பதிப்பகம்


1) கினோ                                                                           

                                         -     கிறிஸ்டோபர் கென்வொர்தி, தமிழில்: தீஷா

2) மாண்டேஜ்: சினிமாவிற்கான டாப் டிப்ஸ்   

                                        -    தமிழில் - தீஷா

3) ஜீரோ பட்ஜெட் ஃபிலிம் மேக்கிங்             

                                        -    தமிழில் தீஷா

4) வினாடிக்கு 24 பொய்கள் இயக்குநர் மிஷ்கின் 

                                        -    எஸ். தினேஷ்
ஓநாயும் ஆட்டுக்குட்டியும் திரையாக்கமும் திரைக்கதையும்

                                       -    மிஷ்கின்

 

நியூசெஞ்சூரி புக் ஹவுஸ்

1) மஹத் முதல் தலித் புரட்சி

                                      -     ஆனந்த் டெல்டும்டே, தமிழில்: கமலாலயன்

2) வால்கா முதல் கங்கை வரை                                         

                                    -  ராகுல சாங்கிருத்தியாயன், தமிழில்: யூமா வாசுகி

3) இந்தியத் தத்துவங்களும் தமிழின் தடங்களும் 

                                   -  நா.முத்துமோகன்

4)  வெகுளி                                       

                                   - ஃபியோதர் தாஸ்தாயெவ்ஸ்கி, தமிழில்: வின்சென்ட்

5) பீகாரிலிருந்து திகார் வரை எனது அரசியல் பயணம்

                                   - கன்னையா குமார்,  தமிழில்: டாக்டர் வெ.ஜீவானந்தம்


சிந்தன் புக்ஸ்

1) நமக்கு ஏன் இந்த இழிநிலை? ஜாதி மாநாடுகளிலும் ஜாதி ஒழிப்பு மாநாடுகளிலும் பெரியார்

                                 - வீ.எம்.எஸ்.சுபகுணராஜன்

2) இரும்புக் குதிகால்          

                                - ஜாக் லண்டன், தமிழில்: அ.சி.விஜிதரன்

3) மகாத்மா ஜோதிராவ் புலே இந்திய சமூகப் புரட்சியின் தந்தை 

                                -     தனஞ்செய் கீர், தமிழில்: வெ.கோவிந்தசாமி

 4. ஸ்பார்ட்டகஸ்   

                               - ஹோவார்ட் ஃபாஸ்ட், தமிழில்: ஏ.ஜி.எத்திராஜுலு

புத்தகத் திருவிழா

பாரதி புத்தகாலயம்

1) 21ஆம் நூற்றாண்டில் மூலதனம்                                             - தாமஸ் பிக்கெட்டி, தமிழில்: பேரா.கு.வி.கிருஷ்ணமூர்த்தி
2). ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம்   -  ஜான் பெர்க்கின்ஸ், தமிழில்: இரா.முருகவேள்
3) முதுகுளத்தூர் படுகொலை                                                      -  கா.அ.மணிக்குமார்
4) வரலாறும் வர்க்க உணர்வும்                                                   -  ஜார்ஜ் லூகாஸ், தமிழில்: கி.இலக்குவன்
5) இந்தியக் கல்விப் போராளிகள்                                                -  ஆயிஷா இரா. நடராசன்


தமிழினி பதிப்பகம்
1) மனைமாட்சி                                                                           - எம்.கோபாலகிருஷ்ணன்
2) பழந்தமிழர் வரலாறு                                                            - கணியன் பாலன்
3) மூலச் சிறப்புள்ள தமிழ்ச் சிந்தனை மரபு                      -  கணியன் பாலன்


தேசாந்திரி பதிப்பகம் 
                                   எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் நூல்கள்
இடக்கை
உலக இலக்கியப் பேருரைகள்
இலக்கற்றப் பயணி
கால் முளைத்த கதைகள்
கடவுளின் நாக்கு


டிஸ்கவரி புக் பேலஸ்
1) பட்டத்துயானை                                                                                                        -   வேல ராமமூர்த்தி
2) கதை, திரைக்கதை, வசனம், இயக்கம், திரைக்கதை திரையான கதை       -   இராதாகிருஷ்ணன் பார்த்திபன்
3)  குற்றப்பரம்பரை                                                                                                        -   வேல ராமமூர்த்தி
4) கரமுண்டார் வீடு                                                                                                       -    தஞ்சை ப்ரகாஷ்
5) கொம்மை                                                                                                                    -     பூமணி


காலச்சுவடு பதிப்பகம்
க்ளாசிக் நாவல்கள் வரிசை அனைத்தும் பெரிய அளவில் கவனம்பெற்றுள்ளன.


டிரெண்டிங் @ விகடன்