`தெற்கில் உதிக்கும் சூரியன்' - கருணாநிதிக்கு இன்று புகழ் அஞ்சலிக் கூட்டம்! 

மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதிக்குப் புகழ் அஞ்சலிக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெறுகிறது. இதில், தேசிய கட்சித் தலைவர்கள், பிற மாநில முதலமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். 

கருணாநிதி

தி.மு.க தலைவராக 50 ஆண்டுகள் வாகை சூடிய கருணாநிதி, வயது மூப்பின் காரணமாக  சமீபத்தில் உயிரிழந்தார். இவரது மறைவையொட்டி, மதுரை, கோவை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் நினைவேந்தல் கூட்டம் நடந்தது. இந்நிலையில், சென்னையிலும் நினைவேந்தல் கூட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டது.  `தெற்கில் உதிக்கும் சூரியன்' என்ற தலைப்பில், நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் புகழ் அஞ்சலிக் கூட்டம் நடைபெறுகிறது. இதில், தி.மு.க தலைவர் ஸ்டாலின், முன்னாள் பிரதமர் தேவகவுடா, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத், சரத்பவார் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொள்கின்றனர். பா.ஜ.க சார்பில் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின்கட்காரி மற்றும் அக்கட்சியின் தேசிய செயலாளர் முரளிதரராவ் ஆகியோர் பங்கேற்கின்றனர். 

இவர்களைத் தொடர்ந்து, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பீகார் முதல்வர் நிதிஷ்குமார், ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆகியோர் பங்கேற்கின்றனர்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!