ஈரோட்டில் நாளை தொடங்கும் `பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ - 2018' - என்ன ஸ்பெஷல்? | Pasumai vikatan agri expo 2018

வெளியிடப்பட்ட நேரம்: 11:12 (30/08/2018)

கடைசி தொடர்பு:11:12 (30/08/2018)

ஈரோட்டில் நாளை தொடங்கும் `பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ - 2018' - என்ன ஸ்பெஷல்?

முதன்முதலாக கடந்த 2015, செப்டம்பர் 25-ம் தேதி தொடங்கி 4 நாள்கள் ஈரோடு மாநகரில் முதன்முதலாக பிரமாண்ட வேளாண் கண்காட்சியை நடத்தியது. நூற்றுக்கும் மேற்பட்ட வேளாண்மை, கால்நடை சம்பந்தப்பட்ட அரங்குகளோடு, வேளாண் வல்லுனர்கள், முன்னோடி விவசாயிகளின் கருத்தரங்குகளும் இந்த கண்காட்சியில் இடம்பெற்றன. வெற்றிகரமாக அமைந்த இந்த கண்காட்சியில் சுமார் 20 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

ஈரோட்டில் நாளை தொடங்கும் `பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ - 2018' - என்ன ஸ்பெஷல்?

`படைப்பவன் மட்டும் கடவுள் இல்லை... பயிரிடுபவனும் கடவுள்தான்...' சமீபத்தில் திரைக்கு வந்த `கடைக்குட்டி சிங்கம்' படத்தில் வரும் ஒரு வசனம் இது. உண்மையில் விவசாயிகள் கடவுள்தான். மக்களெல்லாம் நகரங்களை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் சூழ்நிலையில், இன்னமும் உழவு செய்து நம் வயிற்றுக்கு உணவிட்டு வருபவர்கள் விவசாயிகள். அவர்கள் விவசாயம் மேற்கொள்ள தேவையான தொழில்நுட்பங்கள், கருவிகள் என அனைத்தையும் அறிய வழிகாட்டி வருகிறது பசுமை விகடன். கடந்த நான்கு ஆண்டுகளாகப் பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ என்னும் வேளாண் கண்காட்சியை நடத்தி வருகிறது. ஐந்தாவது முறையாக நாளை வெள்ளிக்கிழமை 31-ம் தேதி தொடங்கி 3-ம் தேதி வரை 4 நாள்கள் ஈரோட்டில் நடைபெற உள்ளது.

பசுமை விகடன்

இந்தக் கண்காட்சிக்குத் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், இந்திய உணவுத் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் மைசூரு மற்றும் தஞ்சாவூர் ஆகியவை தங்களது ஆதரவை வழங்கியுள்ளன. மேலும், ஶ்ரீ சமுத்ரா நிறுவனம் தங்களது ஆதரவை வழங்கியிருக்கிறது.

உலக அளவில் விவசாயத் துறையில் நடைபெற்று வரும் மாற்றங்கள், கடைக்கோடி கிராமத்தில் உள்ள விவசாயிகளுக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், கடந்த 2007-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது `பசுமை விகடன்’ இதழ். கடந்த 10 ஆண்டுகளாக ஒற்றை நாற்று நடவு, ஜீரோ பட்ஜெட், இயற்கை விவசாயம், மரம் வளர்ப்பு, வீட்டுத்தோட்டம், கால்நடை வளர்ப்பு என மாவட்டம் தோறும் 500 முதல் 2000 பேர் வரை கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளை நடத்தி வெற்றி கண்டிருக்கிறது. எப்போதும் பசுமை விகடன் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு மாபெரும் வரவேற்பு அளித்து வரும் விவசாயிகளுக்கு இந்நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இதைத் தொடர்ந்து முதன்முதலாகக் கடந்த 2015, செப்டம்பர் 25-ம் தேதி தொடங்கி 4 நாள்கள் ஈரோடு மாநகரில் முதன்முதலாகக் பிரமாண்ட வேளாண் கண்காட்சியை நடத்தியது. நூற்றுக்கும் மேற்பட்ட வேளாண்மை, கால்நடை சம்பந்தப்பட்ட அரங்குகளோடு, வேளாண் வல்லுநர்கள், முன்னோடி விவசாயிகளின் கருத்தரங்குகளும் இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றன. வெற்றிகரமாக அமைந்த இந்தக் கண்காட்சியில் சுமார் 20 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

பசுமை விகடன்

அதைத் தொடர்ந்து, வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி, தமிழக விவசாயிகளுக்குப் புதிய விஷயங்களை அறிமுகப்படுத்தும் பணியின் அடுத்த கட்டமாக,  முறையாக வேளாண் கண்காட்சி நடத்தும் பணியைக் கையில் எடுத்திருக்கிறது பசுமை விகடன். விவசாயம் சம்பந்தப்பட்ட துறைகளின் அத்தனை தகவல்களையும், தொழில்நுட்பங்களையும் இந்தக் கண்காட்சியின் மூலமும் அளிக்க முடியும் என்று நம்புகிறோம்.

தமிழ்நாட்டில் பல அமைப்புகள் வேளாண் கண்காட்சியை நடத்தி வருகின்றன. இதில் பசுமை விகடன் தனித்ததொரு முயற்சியோடு களத்தில் செயல்பட்டு வருகிறது. பாரம்பர்யம் மற்றும் நவீனம் இரண்டும் கலந்ததாக இந்தக் கண்காட்சி இருக்கும். மற்ற கண்காட்சிகளை விட விவசாயிகள், பார்வையாளர்கள் ஆகியோரின் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடியதாக இந்தக் கண்காட்சியும் அமையும் என்றும் நம்புகிறோம்.

விவசாயத்தில் நடைமுறைத் தொழில்நுட்பங்கள், இன்னும் பார்வைக்கு வராத பல கருவிகள், மகசூலைப் பெருக்கும் எளிமையான கருவிகள், கால்நடை வளர்ப்புக்குத் தேவையான கருவிகள் மற்றும் தொழில்நுட்பங்கள், வீட்டுத்தோட்ட உபகரணங்கள், மதிப்புக் கூட்டும் கருவிகள் உள்ளிட்டவை இந்தக் கண்காட்சியின் முக்கிய அம்சங்களாக இருக்கும். இதோடு `நல்உணவு' என்ற பெயரில் சிறுதானிய உணவுத் திருவிழாவும் நடைபெற உள்ளது. சிறுதானிய விதைகள், உணவுப் பொருள்கள் இந்த அரங்குகளில் கிடைக்கும்.

மஞ்சள் சாகுபடிக்குப் பேர்போன ஈரோட்டில், இந்த மாபெரும் வேளாண் கண்காட்சி வரும் 31-ம் தேதி தொடங்க உள்ளது. ஈரோடு, திண்டல், பரிமளம் மஹாலில் நூற்றுக்கணக்கான அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இருசக்கர வாகனங்கள், கார் பார்க்கிங் வசதிகளுடன், அனைவரும் வந்து செல்லும் வண்ணம் தாராள வசதியுடன் கண்காட்சி வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. கண்காட்சி நுழைவுக் கட்டணம் ரூ.30, மாணவர்களுக்கு ரூ.10.

பசுமை விகடன்

கண்காட்சி நடைபெறும் 4 நாள்களும் இயற்கை இடுபொருள்கள், நீர் மேலாண்மை, மதிப்புக்கூட்டல், மண் நல மேலாண்மை உள்ளிட்ட  தலைப்புகளில் வேளாண் வல்லுநர்கள், நிபுணர்கள், விவசாயிகள், விஞ்ஞானிகள், பேராசிரியர்கள் உரையாற்றும் கருத்தரங்கு அரங்கமும் அமைக்கப்பட்டுள்ளன. செவிக்கும், கண்களுக்கும் விருந்தளிக்கும் வண்ணம் கண்காட்சி நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 

31-ம் தேதி காலை 10 மணிக்குத் திரைப்பட இயக்குநர் பாண்டிராஜ் கண்காட்சியைத் தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றுகிறார். சிறப்பு விருந்தினர்களாக `மண்புழு விஞ்ஞானி' முனைவர் சுல்தான் அகமது இஸ்மாயில், `கொடுமுடி' டாக்டர் நடராஜன், தைவானில் உள்ள உலகக் காய்கறி ஆராய்ச்சி மையத்தின் பூச்சியியல் ஆராய்ச்சிக் குழுத் தலைவர் முனைவர் சீனிவாசன், காஞ்சிபுரம், முன்னோடி இயற்கை விவசாயி சுப்பு, திண்டுக்கல், முன்னோடி மலர் சாகுபடி விவசாயி `சம்பங்கி' மருதமுத்து, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக அங்கக வேளாண்மைத் துறை தலைவர் முனைவர் சோமசுந்தரம், மூத்த பொறியாளர் வீரப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளனர்.

மாபெரும் வேளாண் கண்காட்சியில் பண்ணை இயந்திரங்கள், இயற்கை இடுபொருள்கள், நீர்ப்பாசன கருவிகள், தோட்டக்கலை தொழில்நுட்பங்கள், சோலார் பம்ப்செட், வங்கிகள், ஒருங்கிணைந்த பண்ணையம், பாரம்பர்ய விதைகள், மாடித்தோட்ட தொட்டிகள், நாற்றுப் பண்ணைகள் உள்ளிட்ட பல அரங்குகள் இடம்பெற இருக்கின்றன. 

விவசாயப் பெருமக்கள், பொதுமக்கள் அனைவரையும் கண்காட்சிக்கு அன்புடன் அழைக்கிறோம்.

- பசுமைக் குழு


டிரெண்டிங் @ விகடன்