அமைச்சர் செல்லூர் ராஜுவின் தாயார் காலமானார்!

தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜுவின் தாயார் கே.ஒச்சம்மாள் இன்று காலமானார். அவருக்கு வயது 95.

 செல்லூர் ராஜூ தாயார் கே.ஓச்சம்மமாள்

தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு-வின் தாயார் ஒச்சம்மாள், உடல்நலக்குறைவு காரணமாக, தனியார் மருத்துவமனையில் பல மாதங்களாக சிகிச்சைபெற்றுவந்தார். இந்த நிலையில், நேற்று மாலை வீட்டுக்கு அழைத்துவரப்பட்டார். இன்று காலை திடீரென ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக, அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது உடலுக்கு கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்திவருகின்றனர். இறுதிச்சடங்கு, இன்று மாலை நடைபெறுகிறது. 

முதல்வர், துணை முதல்வர் இரங்கல் செய்தி

fff

Do you like the story?

Please Appreciate the Author by clapping!