தேசிய நெடுஞ்சாலையில் வீலீங் சாகசம்... வாகன ஓட்டுநர்களை அச்சுறுத்தும் வாலிபர்கள்

ஓசூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வாலிபர்கள் டூவீலரில் வீலீங் சாகசம் செய்து பயணிகளை அச்சுறுத்தும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது. இதைக் கண்காணித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

வீலீங் சாகசம்

கிருஷ்ணகிரி டு பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை 24 மணி நேரமும் பரபரப்பாக இயங்கக் கூடியது. இந்தச் சாலையில் விபத்து நடக்காத நாளே கிடையாது எனலாம். அந்த அளவுக்குப் பரபரப்பான சாலையாக இருந்து வருகிறது. இந்தச் சாலையில் காலை, மாலையில் பள்ளிக்கு மாணவிகள் வந்து செல்லும்போது, டூவீலரில் வரும் வாலிபர்கள் மாணவிகள் பார்க்கும்படி வீலீங் சாகசம் செய்து சாலையில் பரபரப்பை ஏற்படுத்துகின்றனர். இதனால் சாலையில் பயணம் செல்லும் பயணிகள், பயணம் செய்யவே அஞ்சி ஒதுங்கிவிடுதாகக் கடந்த சில தினங்களாகப் புகார் கூறி வருகின்றனர். 

இந்த நிலையில், இன்று சாலை ஓசூர் அட்கோ போலீஸ் ஸ்டேசன் முன்பாக உள்ள நெடுஞ்சாலையில் டூவீலரில் வந்த வாலிபர்கள் வீலீங் சாகசம் செய்து சாலையில் செல்பவர்களை அச்சுறுத்தும் சாகச வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவிய வைரல் ஆகியுள்ளது. கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய ரோந்து பணி காவலர்கள் மாமூல் வாங்குவதில் கண்ணும் கருத்துமாக இருப்பதால் இது போன்ற குற்றங்களைக் கண்டுகொள்வதே இல்லை என்று குற்றம்சாட்டுகின்றனர் பொதுமக்கள். பெரும் விபத்து நடக்கும் முன்பாக, இதுபோன்ற குற்றங்களைக் கண்காணித்த நடவடிக்கை எடுக்குமா காவல்துறை?

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!