`12,000-மாவது கொடு!’ - அரசுப் பொறியாளருக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை | theni court convicted government engineer over bribe

வெளியிடப்பட்ட நேரம்: 17:20 (30/08/2018)

கடைசி தொடர்பு:17:20 (30/08/2018)

`12,000-மாவது கொடு!’ - அரசுப் பொறியாளருக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை

தேனி நீதிமன்றம்

ஞ்சப் புகாரில் சிக்கிய பேரூராட்சி இளநிலைப் பொறியாளருக்கு 2 வருட சிறைத்தண்டனையும் 2,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ள சம்பவம், தேனி மாவட்டத்தில் விவாதப் பொருளாகியுள்ளது. 

தேனி மாவட்டம் டி.மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் கடந்த 2009-ம் ஆண்டு, பண்ணைப்புரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தண்ணீர்க் குழாய் பணி செய்வதற்காகப் பேரூராட்சியிடமிருந்து கான்ட்ராக்ட் பெற்று பணிகள் செய்து வந்துள்ளார். பணிகள் நிறைவடைந்ததும், அதற்கான சான்றிதழைப் பேரூராட்சி இளநிலை பொறியாளரிடம் கேட்டுள்ளார். இதற்குப் பதில் அளித்த இளநிலை பொறியாளர் வனிதை என்பவர் 25,000 ரூபாயை லஞ்சமாகக் கேட்டுள்ளார். பின்னர், `12,000-மாவது கொடு' எனப் பேரம் பேசியுள்ளார். இதன் பின்னர், பிப்ரவரி 13, 2009 அன்று, உத்தமபாளையம் அருகே உள்ள கோயில் ஒன்றுக்கு கோவிந்தராஜை வரச்சொன்ன வனிதை, அங்கு பணத்தை வாங்கிக்கொண்டு, தனது காரில் வைத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், வனிதை மற்றும் பேரூராட்சிப் பொறியாளர் சுப்பிரமணி, கார் ஓட்டுநர் அழகுராஜா ஆகியோரைக் கைதுசெய்தனர்.

இந்த வழக்கு தேனி தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்துவந்தது. இந்த வழக்கில் 17 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 27 ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. இந்த வழக்கில் ஊழல் மற்றும் கண்காணிப்புத்துறையின் சார்பில் சிறப்பு வழக்கறிஞர் உதயகுமார் ஆஜரானார். விசாரணை முடிந்து இன்று தீர்ப்பளித்த தேனி தலைமை நீதித்துறை நடுவர் நீதிபதி இளங்கோ, வனிதைக்கு 2 வருடச் சிறைத்தண்டனையும் 2,000 ரூபாய் அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தார். சுப்பிரமணி மற்றும் அழகுராஜா ஆகியோர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டனர். 

 


[X] Close

[X] Close