`மணல் குவாரிகளை நிபுணர் குழு ஆய்வு செய்யும்!' - உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு

மணல் குவாரி அமைக்கும் பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இங்கு மணல் குவாரிகள் வந்தால் அருகில் உள்ள பாலங்கள் சேதமடையும்.

உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

 

இடையாத்திமங்கலம் வெள்ளாற்றுப் படுகையில் மணல் குவாரி அமைக்கும் பணியில் தற்போதைய நிலை தொடரவும் மணல் குவாரி அமையும் இடத்தில் நிபுணர் குழு ஆய்வு செய்யவும் உத்தரவிட்டுள்ளது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை. 

உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார் பாண்டியராமன் என்பவர். உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் அளித்த பொதுநல மனுவில் `` புதுக்கோட்டை மாவட்டத்தில் இடையாத்திமங்கலம் என்னும் கிராமம் உள்ளது. இங்கு வெள்ளாறு ஆறு உள்ளது. இந்த ஆற்றை நம்பி விவசாயப் பணிகள் நடந்து வருகின்றன. மேலும், கூட்டுக்குடிநீர் திட்டமும் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், சர்வே எண் 222ல்  மணல் குவாரி அமைக்கும் பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இங்கு மணல் குவாரிகள் வந்தால் அருகில் உள்ள பாலங்கள் சேதமடையும். இயற்கைச் சீற்றங்கள் அரங்கேறவும் ஏதுவாக அமைந்துவிடும். எனவே, இடையாத்திமங்கலம் வெள்ளாறு ஆற்றுப் படுகையில் மணல் குவாரி அமைக்கும் பணிகளை நிறுத்தி வைக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' எனக் குறிப்பிட்டிருந்தார். 

இந்த மனு இன்று நீதியரசர்கள் எம்.எம்.சுந்தரேஸ் - சதீஷ்குமார் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இடையாத்திமங்கலம் கிராமம் வெள்ளாற்றுப் படுகையில் மணல் குவாரி அமைக்கும் பணிகளில் தற்போதைய நிலை தொடரவும் மணல் குவாரி அமையவுள்ள இடத்தில் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு ஆய்வு செய்யவும் உத்தரவிட்டும் வழக்கினை நான்கு வார காலத்துக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!