`தடுப்பணையை வலுவாகக் கட்டுங்கள்' - கிருஷ்ணசாமி வலியுறுத்தல் | Need far-reaching plans to increase ground water resources! Krishnasamy information!

வெளியிடப்பட்ட நேரம்: 19:45 (30/08/2018)

கடைசி தொடர்பு:19:45 (30/08/2018)

`தடுப்பணையை வலுவாகக் கட்டுங்கள்' - கிருஷ்ணசாமி வலியுறுத்தல்

``தமிழகத்தின் நிலத்தடிநீர் ஆதாரத்தைப் பெருக்க நீர் மேலாண்மை குறித்து மத்திய, மாநில அரசுகளால் தொலைநோக்குத் திட்டம் தீட்ட  வேண்டும். மழைநீர் வீணாவதைத் தடுக்கத் தடுப்பணைகள் கட்ட வேண்டும்" எனப் புதிய தமிழக கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணசாமி

கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜு இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்ட பின்பு செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, ``தமிழக முதலமைச்சர் 1,000 கோடி ரூபாயில் தடுப்பணைகள் கட்டப்படும் என அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. கட்டுமானம் சரியில்லாமல் தடுப்பணைகள் உடைந்துபோகின்றன. எனவே, தடுப்பணைகள் வலுவாக மழை வெள்ளத்தைத் தாங்கும் அளவில் கட்டப்பட வேண்டும். தடுப்பணை அமைக்கப்படும் என அறிவித்துள்ளார்கள். இவ்வாறு அமைக்கப்படும் தடுப்பணை வலுவானதாகக் கட்ட வேண்டும்.

இந்தியா முழுவதும் சீராக மழை பெய்யவில்லை. மழை அதிகம் பெய்த இடங்களில் அதிகம் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் போதிய மழையில்லை. இருந்தாலும்கூட தாமிரபரணியில் வெள்ளம் ஏற்பட்டு கடலில் வீணாகக் கலப்பதை தடுக்கத் தடுப்பணைகள் கட்ட வேண்டும். விவசாயிகள், விவசாயிகள் சங்கம் என்ற பெயரில் சில சுயநல அமைப்புகள் தடுப்பணை கட்டும் திட்டங்களுக்குத் தடை விதித்து வருகின்றனர். தமிழகத்தின் நிலத்தடிநீர் ஆதாரத்தைப் பெருக்க நீர் மேலாண்மை குறித்து மத்திய, மாநில அரசுகளால் தொலைநோக்குத் திட்டம் தீட்ட வேண்டும். தமிழகத்தைப் பொறுத்தவரை வற்றாத ஜீவநதிகள் என்று பெரியளவில் இல்லை. கிடைக்கின்ற நீரைச் சேமிக்க ஓடைகள், ஆறுகளின் குறுக்கே வாய்ப்பு இடங்களில் தரமான, வலுவான தடுப்பணைகள் கட்ட வேண்டும்.

தாமிரபரணியிலிருந்து வீணாகக் தண்ணீர் கடலில் கலக்கிறது. இது ஒருபுறமிருக்க மானூர் அருகே 500 கிராமங்களில் குடிக்கத் தண்ணீர் இல்லை. பள்ளமடை, மானூர் குளங்கள் நிரம்பவில்லை. இதையெல்லாம் கணக்கில் கொண்டு நீண்ட கால தொலைநோக்கத்தோடு நீர் மேலாண்மையை மத்திய, மாநில அரசுகள் உருவாக்க வேண்டும். 2018-ல் மழைப் பொழிவு எவ்வளவு, எந்த அளவுக்கு காவிரி, வைகை, தாமிரபரணியிலிருந்து தண்ணீர் வீணானது. என்ன செய்தால் நீரைச் சேமித்து, வரக்கூடிய 2 அல்லது 3 ஆண்டுகளுக்கு விவசாயம், குடிநீருக்குப் பயன்படுத்தியிருக்க முடியும் என்பதைத் தமிழக அரசு கள ஆய்வு செய்து வெளியிட வேண்டும்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க